சிரத்தை
சிரத்தை என்பது ஒரு செயலில் தொழிலில் கவனக்குறைவு இல்லாமல், சோம்பல் இல்லாமல் கடினமாக ஈடுபுடம் ஒரு நற்பண்பாகும்.
மேற்கோள்கள்
தொகு- சிரத்தையுள்ள மனிதனுக்கு உபகரணங்கள் தாமாகவே அமைகின்றன. அப்படிக் கிடைக்காவிட்டால், அவனே உண்டாக்கிக் கொள்கிறான். - சான்னிங்[1]
- பூரணமான, உற்சாகமுள்ள மனப்பூர்வமான சிரத்தைக்கு ஈடானது எதுவுமில்லை. - டிக்கன்ஸ்[1]
- சிரத்தை இல்லாமல் எந்த மனிதனும் பெருமையடைவதில்லை, அல்லது பெரிய காரியங்களைச் சாதிப்பதில்லை. - பேய்ன்[1]
- நீ செல்வனாக வேண்டுமா? நீ அரைகுறையாயில்லாமல் முழு மனத்தோடு விரும்பினால், அப்படி ஆக முடியும். -ராபர்ட்ஸன்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 183. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.