சமூகச் செல்வாக்கு

ஒரு நபரின் எண்ணங்கள் அல்லது செயல்களால் மற்றவர்கள் பாதிக்கப்படும்போது சமூக செல்வாக்கு ஏற்படுகிறது.

  • உலகை ஆட்டிவைக்க விரும்புவோன் முதலில் தன்னை இயக்கி வைத்துக்கொள்ள வேண்டும். - சாக்ரடீஸ்[1]
  • மனிதர்களை வசப்படுத்துவது. அவர்களைக் குறை சொல்வதாலன்று. அவர்களை அன்பினால் அரவணைத்துக் கொள்வதால் இயலும். - சான்னிங்[1]
  • பேரறிவும் புனித வாழ்வும் உலகம் வெளியிடும் சிந்தனைகள். உலகை மாற்றிவிடுகின்றன. -எமர்ஸன்[1]
  • ஒருவருடைய குணம் வெளியே பரிமளிப்பது செல்வாக்கு. - டெயிலர்[1]
  • மிகுந்த அனுதாபமில்லாத இடத்தில் சொற்பச் செல்வாக்குதான் இருக்கும் - எஸ். ஐ. பிரைம்[1]
  • மற்றவர்களுடைய அரிய சொற்பொழிவுகளைக்காட்டிலும், நல்லவர்களுடைய ஒரு சொல் அல்லது தலை அசைப்பு அதிகச் செல்வாக்குடையது. - புளுடார்க்[1]
  • மிகச் சொற்பமான அசைவும் இயற்கை அனைத்திற்கும் முக்கியமாகும். ஒரு சிறு கல் விழுந்தாலும் அது சமுத்திரம் முழுவதையும் பாதிக்கும். - பாஸ்கல்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 197-198. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சமூகச்_செல்வாக்கு&oldid=21559" இலிருந்து மீள்விக்கப்பட்டது