சதி
சதி (Conspiracy) என்பது பெரும்பாலும் இரகசிய மற்றும் கெட்ட நோக்கங்களுடன் செய்யப்படும் செயலுடன் பொருள் கொண்டு பயன்படுத்தப்படுகிறது.
- மனத் திருப்தியில்லாத மக்கள் மலிந்துள்ள நாட்டிலேதான் சதிகாரர்கள் முளைப்பார்கள். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
- நாடாள்பவனிடம் மக்கள் நல்லெண்ணம் உடையவர்களாயிருந்தால், சதிகாரர்கள் மக்களையும் தங்கள் எதிரிகளாகப் பாவித்துப் பயப்படுவார்கள். தங்கள் சதிக்குற்றம் வெளிப்பட்டு விட்டால் புகலிடம் இல்லாமல் திண்டாட நேரிடுமேயென நினைத்துச் சதி செய்யும் எண்ணமே அற்றுப் போவார்கள். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.