சசி தரூர்

இந்திய அரசியல்வாதி

சசி தரூர் (பிறப்பு 9 மார்ச் 1956) இந்தியாவின் முன்னாள் மனிதவள மேன்பாட்டுத் துறை அமைச்சரும், முன்னாள் வெளியுறவுத்துறை இணையமைச்சரும் மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினரும் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  • பிரிட்டனின் 200 ஆண்டு கால காலனியாதிக்கம் அவர்களது வளர்ச்சியை முன்னிறுத்தியே தொடர்ந்தது. பிரிட்டனின் வளர்ச்சியாக விதந்தோதப்படும் தொழிற்புரட்சி, இந்தியத் தொழில் துறையை அழித்ததன் மூலமே உருவானது.[1]
  • காலனியாதிக்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பொருளாதாரச் சூழ்நிலைகள் மோசமடைந்தன என்பதே உண்மை. பிரிட்டன் ஆதிக்கவாதிகள் இந்தியாவுக்குள் நுழையும்போது உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 23%. பிரிட்டன் நாட்டைவிட்டு வெளியேறியபோது உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 4%. இதைவிடச் சான்று வேண்டுமா?[1]
  • 19-ம் நூற்றாண்டின் முடிவில் இந்தியா, பிரிட்டனின் மிகப் பெரிய கறவை மாடானது, பிரிட்டன் பொருட்களின் நுகர்வுச் சந்தையாக மாற்றப்பட்டது.[1]
  • செல்வவளம் கொழித்த விக்டோரிய இங்கிலாந்தின் செல்வந்தர்கள், அடிமைப் பொருளாதாரத்தின் மூலமே தங்களது செல்வங்களை ஈட்டியுள்ளனர். அடிமைப் பொருளாதாரம் மூலம் ஐந்தில் ஒரு பங்கு இங்கிலாந்து மக்கள் பணக்காரர்களானார்கள்.[1]
  • காலனி ஆதிக்க நாடுகளில் பிரிட்டன் அரசு ரயில் பாதைகளையும் சாலைகளை அமைத்ததைப் பற்றிப் பிரமாதமாகப் பேசுகிறார்கள். பிரிட்டனின் தொழில் துறைத் தேவைகளுக்காக, கொள்ளைக்காகக் கொண்டுவரப்பட்டவைதான் ரயில்வேயும், சாலைகளுமே தவிர, உள்ளூர் மக்களின் பயன்பாடுகளுக்காக அல்ல. கச்சாப் பொருட்களை உள்ளூரிலிருந்து துறைமுகத்துக் கொண்டுசெல்ல வேண்டும். அதற்காகவே போக்குவரத்து பெரிதும் பயன்பட்டது.[1]
  • இந்தியாவில் ரயில்வேயை உருவாக்க பிரிட்டன் முதலீட்டாளர்களை அழைத்தபோது, இந்தியாவிலிருந்து கிடைக்கும் பெரிய தொகையை, அதாவது இந்திய வரிப்பணம் என்ற ஆசையையும், உத்தரவாதத்தையும் அளித்தது. இதனால் ஒரு மைல் தூர பால வேலைகள் நடக்க இரு மடங்கு செலவானது. அதாவது கனடாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ இந்தத் தொலைவுக்கு ஆகும் செலவைவிட இரு மடங்கானது. இந்தியப் பொதுமக்களைத் துன்பத்தில் ஆழ்த்தி, பிரிட்டன் தனியார் துறைகள் ரயில்வே, சாலைகள் திட்டம் மூலம் கொழுத்து வளர்ந்தன.[1]

நபர் குறித்த மேற்கோள்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்

தொகு
"https://ta.wikiquote.org/w/index.php?title=சசி_தரூர்&oldid=12935" இலிருந்து மீள்விக்கப்பட்டது