கோட்டல்ட் எஃப்ராய்மி லெஸ்சிங்
ஜெர்மன் எழுத்தாளர், மெய்யியலாளர், நாடக கலைஞர், கலை விமர்சகர் (1729–1781)
கோட்டல்ட் எஃப்ராய்மி லெஸ்சிங் (Gotthold Ephraim Lessing) (22 ஜனவரி 1729 - 15 பிப்ரவரி 1781) என்பவர் ஒரு ஜெர்மன் எழுத்தாளர், மெய்யியலாளர், நாடக கலைஞர், கலை விமர்சகர் ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- கடவுள் வலது கையில் முழு உண்மையையும், இடது கையில் உண்மையைத் தேடுவதில் அழியா ஆசையையும் வைத்துக்கொண்டு, எது வேண்டும் என்று என்னைக் கோட்டால்-இடது கையில் உள்ளதை விரும்பினால் என்றும் இருட்டிலேயே இருக்க வேண்டியிருப்பினும்- நான் இடது கை முன் தலையைத் தாழ்த்தி, 'தந்தையே தாரும்; உண்மை உமக்கே உரியது' என்று கூறுவேன். ஏனெனில், மனிதன் உண்மையை அடைவதாலன்றி உண்மையைத் தேடுவதாலேயே பரிபூரணத்துவத்தைத் தன்னிடம் இடைவிடாது வளர்த்துக் கொள்வதற்குரிய தன் சக்திகளை விருத்தி செய்துகொள்கிறான்.[1]
குறிப்புகள்
தொகு- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை. நூல் 23- 29. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.