குறிஞ்சி மலர்

குறிஞ்சி மலர் (1960) என்பது நா. பார்த்தசாரதி (மணிவண்ணன்) நூலாகும். இது ஒரு தமிழ் சமூக நாவலாகும். இந்நூலின் முதல் பதிப்பு 1960 டிசம்பர் மாதத்தில் வெளியானது.

 • மெய்யாய் இருந்தது நாட்செல வெட்ட வெறும் பொய்யாய்ப் பழங்கதையாய்க் கற்பனையாய் மெல்லப் போனதுவே! பிரபஞ்சப் பூச்செடியில் மறுபடியும் ஒரு நாள் மலர் பூத்துக் கொண்டிருந்தது.
  • அத்தியாயம் 1 பக்கம் 11, வாக்கியம் 1
  • முதலாவது அத்தியாயத்தின் முதலாவது வரி.
 • மலரின் மென்மையில் கலந்து இழையோடும் மணம்போல் அந்தக் குளிரோடு கலந்து வீசும் இதமான மண்காற்று புலர்ந்தும் புலராமலும் இருக்கிற பேரரும்பு போல் விடிந்தும் விடியாத பேதைப்பருவத்து இளம்காலை நேரம், கீழ்வானத்து ஒளிக் குளத்தில் வைகறை நங்கை இன்னும் மஞ்சள் பூசிக் குளிக்கத் தொடங்கவில்லை.
  • அத்தியாயம் 1 பக்கம் 11, வாக்கியம் 3
 • அவைகளை எங்கே பறித்து வைப்பது? யார் வைப்பது? துக்கத்தைக்கூட வரன் முறையாகவும் ஒழுங்காகவும் கொண்டாடுகிற அளவுக்கு வாழ்க்கையைப் பயன்படுத்திக் கொண்டு பழகிவிட்ட நாடு இது.பாஸ்கரரும் தினகரரும் இராமநாதபுரத்தில் இருந்து சென்னை பட்டணம் பயணமாகார்கள்.
  • அத்தியாயம் 1 பக்கம் 12, வாக்கியம் 1

* எங்கும், எப்பொழுதும், புறப்பட்டுப் போவதற்கு வசதியான வெளி நாட்டுப் பயண அனுமதியை 'இண்டர்நேஷனல் பாஸ் போர்ட்டாக வாங்கிவிட ஏற்பாடு செய்து கொண்டிருந்தான் அரவிந்தன்.

  • பக்கம் 331, வாக்கியம் 2

வெளியிணைப்புகள்தொகு

விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:


விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=குறிஞ்சி_மலர்&oldid=12573" இருந்து மீள்விக்கப்பட்டது