குர்திஸ்த்தான் பழமொழிகள்
இப்பக்கத்தில் குர்திஸ்த்தான் பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன
- ஆணும் பெண்ணும் மண்வெட்டியும் வாளியும்போல.
- இளமையில் மணம் செய்து கொள், நீ இளமையாயிருக்கும் போதே பெரிய குழந்தைகளை அடைய முடியும்.
- கரடிக்கு வயதானால், அது குட்டிகளுக்கு விளையாட்டுக் கருவியாகும்.
- குழந்தைகள் நிறைந்த வீட்டில் சயித்தான் ஆள்வதில்லை.
- பத்து நாள் பெண்ணாயிருப்பதைவிட ஒரு நாள் ஆணாயிருப்பது மேல்.
- பெண் ஒரு கோட்டை -ஆண் அவள் கைதி
- பெண் முற்றிலும் ஆணின் உடைமையாகாள்.
- மரணம் நமது விருந்தாளி.
- மனிதன் ஆறு - பெண் ஏரி
- வீடு என்றால், மூன்று குழந்தைகளாவது இருக்கவேண்டும்.