கி. வீரமணி

(கி.வீரமணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கி.வீரமணி திராவிடர் கழகத்தின் தலைவர். திராவிடர் கழகத்தின் இயக்க இதழான விடுதலையின் 50 ஆண்டுகால ஆசிரியர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 69% இடஒதுக்கீட்டை தமிழகத்தில் கொண்டு வர 31(சி) என்ற தனிச்சட்டத்தை உருவாக்கி கொடுத்தவர்.

மேற்கோள்கள் தொகு

  • நம்மால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்.[1]
  • மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல; அறிவின் ஊற்றுக்கள். உணர்ச்சியின் உறைவிடங்கள்.[1]
  • உங்கள் மனத்துள், எதையும் பற்பல கோணங்களில் பார்க்கும் ஆழ்ந்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.[1]
  • அறிவுரைகளை நாம் பிறருக்கு வழங்குமுன், கொஞ்சம் நமக்குள்ளே சில கேள்விகளைக் கேட்டுக் கொள்வது கட்டாயத் தேவை.[1]
  • மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல; அறிவின் ஊற்றுக்கள். உணர்ச்சியின் உறைவிடங்கள்.[1]
  • உங்கள் மனத்துள், எதையும் பற்பல கோணங்களில் பார்க்கும் ஆழ்ந்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.[1]
  • அறிவுரைகளை நாம் பிறருக்கு வழங்குமுன், கொஞ்சம் நமக்குள்ளே சில கேள்விகளைக் கேட்டுக் கொள்வது கட்டாயத் தேவை.[1]
  • மனிதன் அடக்கம் என்ற போர்வையில் தன்னைப் போர்த்திக் கொள்ள வேண்டும்.[1]
  • அடக்கத்தின் சிறப்பே, நாம் உயர உயரப் பணிவும், அடங்கலும் அதிகமாகிக் கொண்டே வருதலில்தான் இருக்கிறது.[1]
  • உரமிடாத பயிரும், படித்து கூர்மையாக்கப்படாத அறிவும் வளர்ச்சி குன்றியவையே.[1]
  • எல்லோருக்கும் தேவையானது சிறந்த அறிவும், திறந்த இதயமும் ஆகும்.[1]
  • தொண்டால் உயரும் அறிவே உண்மை அறிவு; அது கற்பதால் வரும் அறிவு; வெறும் படிப்பால் பெறும் அறிவு அல்ல; இரண்டும் வெவ்வேறானவை. காரணம் கற்பது வேறு; படிப்பது வேறு.[1]
  • புத்தகங்களைப் படிப்பதை விட, மனிதர்களைப் படிப்பதே மிக மிக முக்கியம்.[1]
  • வாழ்க்கையில் தவறுகள் என்று ஒன்றுமில்லை; எல்லாம் பாடங்கள், அனுபவங்கள், அவைதான் நன்மையைத் தருபவை.[1]
  • எதிலும் துணிந்து பங்கேற்று பல்வேறு அனுபவங்களையும் சுவைக்கத் தவறாதீர்.[1]
  • தனக்கு நேர்ந்த அனுபவங்களை ஒவ்வொருவரும் மறு ஆய்வு செய்து, அசை போட்டு, சிந்தித்துப் பார்க்க தவறக் கூடாது.[1]
  • சிலருக்கு வாழ்க்கைக் கடலில் லட்சியக் கரை சேர அவரது அனுபவம் என்ற நீச்சல் பயன்படுகிறது.[1]
  • அன்றாடம் அனுபவம் என்ற பக்கங்களைக் கொண்டது நமது வாழ்க்கை; அதைத் திறந்த புத்தகமாக வைத்துக்கொள்வோம்.[1]
  • நோயைக் குணப்படுத்துவது டாக்டர்கள் கடமை, நோயாளியின் மனதைச் சரிப்படுத்துவது பார்வையாளரின் பொறுப்பு என்பதை மறவாதீர்.[1]
  • பகலும் இரவும் எப்போதும் ஒன்றையொன்று துரத்துவது போலத்தான், மகிழ்ச்சியும் சோகமும் ஒன்றையொன்று முந்தப் பார்க்கும்.[1]
  • நாம் மூச்சை இழுத்து வெளியே விடுவதுபோல, அன்பையும் இருவழிப்பாதை ஆக்கினால் உலகமே நம் கைக்குள் வரும்.[1]
  • மகிழ்ச்சி என்பது நமது சுற்றுச் சூழல் தருகின்ற கொடை அல்ல; உள்ளத்திலிருந்து கிளம்ப வேண்டிய ஊற்று.[1]
  • உடல் நலம் பெரிதும் மனநலத்தைப் பொறுத்தது.[1]
  • உடலை அழகுபடுத்திக் கொள்வதை விட மிகமிக முக்கியம் நம் மனதை, உள்ளத்தை அழகுபடுத்திக் கொண்டு, பிறர் மனதை மதித்து வாழ்வது.[1]
  • உள்ளத்தில் அறிவை நட்டுக் கொண்டு, மனத்தை அழகுபடுத்திக் கொள்வது மிகவும் தேவை.[1]
  • உணர்ச்சிகள் என்பன, நமது புலன்கள் மூலம் நாம் அறிவதையொட்டி நமக்குள் ஏற்படுத்தும் அலைகள்.[1]
  • அடிக்கடி உணர்ச்சி வயப்படாதீர்கள், உணர்ச்சிகளை நீங்கள் ஆளுங்கள், உணர்ச்சிகள் உங்களை ஆள விட்டுவிடாதீர்கள்.[1]
  • எதையும் பதற்றமின்றிச் சலனமில்லாமல் ஓடும் சிற்றோடை போல வாழ்க்கையைப் பார்க்கப் பழகியவரை, துன்ப அலைகள் அலைக்கழிக்கவே முடியாது.[1]
  • பிழைபட உணர்தலைப் போக்க வேண்டுமே தவிர, காக்கவோ பெருக்கவோ கூடாது.[1]
  • எதையும் நயம்பட உரைத்தலில்தான் நம் வாழ்வின் வெற்றி அமைந்துள்ளது.[1]
  • உறுதி மொழிகளை எப்போதும் நிதானித்து அளியுங்கள்; அவசரப்பட்டுக் கூறி பிறகு அவதிக்குள்ளாகாதீர்கள்.[1]
  • நாம் பிறருக்கு உதவும் போது ஏற்படும் இன்பம்தான் நமது மனிதநேயத்தினை அளக்கும் கருவி.[1]
  • நல்ல நூல்களை நாள்தோறும் படிப்பவர்களின் மனம் விசாலப் பார்வையால் விரியும், அகண்டமான அந்த அறிவினால் உலகை விழுங்க முடியும்.[1]
  • எப்போதும் மவுனம் தேவையில்லை; தேவைப்படும்போது மவுனம் சிறந்த ஆயுதம்.[1]
  • எளியதைச் செய்ய எவராலும் முடியும். எதிர்கொள்ள பலரும் அஞ்சும் பணியை செய்ய என்னால் முடியும் என்று துணிவு கொள்க.[1]
  • காதல் என்பது துள்ளும் இளமைப் பருவத்தில் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் கவர்ச்சியால் ஈர்க்கப்படுதல்.[1]
  • நாம் மந்தைகள் அல்ல ஒரே பக்கம் ஓடிச்செல்ல, மனிதர்கள்! நாட்டுக்கு நாடு மட்டுமல்ல; வீட்டுக்கு வீடு மனிதர்களின் எண்ண ஓட்டங்கள் மாறுபடுகின்றன, வேறுபடுகின்றன.[1]
  • கையில் ஒரு மனிதனுக்குக் காசில்லா நிலை ஏற்பட்டாலும், மனதில் மாசில்லா நிலையிலிருந்து அவன் மாறக்கூடாது.[1]
  • நோய்களில் கொடிய நோய் மூடநம்பிக்கை என்ற நோய்தான்.[1]
  • கடமை, உரிமை இரண்டையும் புரிந்து, ஒன்றுக்காக மற்றொன்றை விட்டுக் கொடுக்காத மன உறுதி வேண்டும்.[1]
  • ஒருவரது தவறைச் சுட்டுவது தவறல்ல; பலர்முன் சுட்டிக் காட்டி மிகக் கேவலமாக மற்றவர் நினைக்கும்படி செய்வது தவறு.[1]
  • இளைய பருவத்திலேயே புத்தகம் படிக்கும் பழக்கத்தை விளையாட்டைப் போலவே மிகுந்த ஈடுபாட்டுடன் பெருக்கி கொள்வது மிக நல்லதாகும்.[1]
  • நம்முடைய மனம் என்னும் காட்டுக் குதிரையை அடக்கிக் குறிப்பிட்ட சரியான வழியில் அதனை நடைபோட வைப்பதே பகுத்தறிவு.[1]
  • செய்த தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்கும் பழக்கத்தை நமது குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.[1]
  • நூலைப் படித்து, தகவல்களைப் பெற்று, ஆய்வு செய்து அறிவை பெருக்கினால் ஆயுள் வளரும், இயங்கினால்தான் மூளை; இன்றேல் அது வெறும் ஈளை.[1]
  • எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்பவனே சிறந்த மனிதன்.[1]
  • மணிக்கணக்கில் பேசாமல், மணிமணியாக பேசுதல் சிறப்புடைத்து.[1]
  • அறிவு ஆள வேண்டிய இடத்தில், உணர்ச்சிப் போதையை ஏற்று வாழ்க்கையை வீணாக்காதீர், மானிடர்களே!.[1]
  • நாம் இழக்கும் எதையும் திரும்ப பெற முடியும். இரண்டை இழந்தால் மீண்டும் பெறவே முடியாது. ஒன்று உயிர் மற்றொன்று காலம்.[1]
  • காலத்தைத் தன்கையில் வைத்துள்ள எவருக்கும், ஞாலம் தன் காலடியில் என்ற துணிவும் தன்னம்பிக்கையும் தானே வரும்.[1]
  • இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். புகழ் ஓட்டமும் அதுபோலத்தான். அதுதான் சீரிய உடல் நலத்திற்கு அடையாளம்.[1]
  • காலத்தை கருவூலப் பொருளைச் செலவழிப்பதைவிட, கவனம் அதிகமாகக் கொண்டு செலவழியுங்கள்.[1]
  • பெற்றோர்கள், குழந்தைகளை வளர்க்கும் போதே 'நன்றி' என்பதைச் சொல்லிக் கொடுத்துப் பழக்கப்படுத்திவிட வேண்டும்.[1]
  • ஆக்கச் சிந்தனையோடு வாழுங்கள், எதையும் எதிர்மறையாக சிந்தித்து வாழாதீர்கள். ஆக்கச் சிந்தனை ஊக்கத்தை, உயர்வை வளர்க்கும், எதிர்மறைச் சிந்தனை நம்மை பள்ளத்தில் தள்ளும்.[1]
  • கூட்டுக்குழு மனப்பான்மையை முதல் மூலதானமாகக் கொண்டு முன்னேறுங்கள்.[1]
  • நம்மை முன்நிறுத்தி மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளுவது முதலீடு அல்ல; அதுவும் வரவுக்கு மிஞ்சிய செலவு.[1]
  • வாழ்க்கையில் நாம் வெற்றி பெறுவதற்குத் தன்முனைப்பு ஒரு தடைக்கல்.[1]
  • ஒருவருக்கு மென்மேலும் தன்னம்பிக்கையை ஊட்டிக் கொண்டே இருந்தால் அவரை திறமைசாலியாக ஆக்கிக் காட்ட முடியும்.[1]
  • தன்னம்பிக்கையோடு செயல்படுவோர் சோதிடம் என்ற மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டால், அது எட்டிப் பழத்தைக் கடித்த கதைதான்.[1]
  • எண்ணம் இல்லாத செயல் - வரப்பற்ற வயல்; செயல் இல்லாத எண்ணம் - காட்டில் காய்ந்த நிலா.[1]
  • முதலில் திட்டமிட்டுச் செயலாற்றுங்கள், அதில் தோல்வி எதிர்ப்பட்டாலும் கவலைப்படாதீர்கள் மீண்டும் முயலுங்கள்; வெல்வீர்கள்![1]
  • திட்டமிட்டுச் செயலாற்றுங்கள். தீர்வுகள் வெற்றியின் உச்சத்திற்கே உங்களை அழைத்துச்செல்லும்.[1]
  • இளைஞர்களே உங்கள் இளமைப்பருவம் உழுது, விதைத்து, உழைத்து அறுவடை செய்ய வேண்டிய அரிய பருவமாகும்.[1]
  • எதையும் எதிர்கொண்டு வாழ்வோம் என்ற இன்றைய துணிச்சல், நாளை வரும் துன்பங்களைக் கூட துரத்தியடிக்கும், மறவாதீர்![1]
  • பிறருக்காக துயரப்படுவது என்பது மானிடப்பற்றை, மனித நேயத்தை மிகவும் வளர்க்கும்.[1]
  • முடிவு எடுக்கத் திணறாதீர், முடிவு எது வந்தாலும் ஏற்கும் ராணுவ வீரர்களைப் போன்ற நெஞ்சுரம் தேவை.[1]
  • ஏழைகளால் ஏற்றம் உண்டு; கோழைகளால் எந்தப் பயனும் ஏற்படவே ஏற்படாது.[1]
  • உங்கள் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு பேரிடரும், உங்களுக்கு உள்ளத்தில் உறுதி இருந்தால் அது பேரிடராக இருக்காது; பெரும் திருப்பத்திற்கு அடிகோலிய ஒரு சம்பவமாக மாற்றமடையலாம். மறவாதீர்![1]
  • தீர்க்கவே முடியாத, தீர்வில்லாப் பிரச்சினைகள் என்று உலகில் எங்கும் எப்போதும் கிடையாது![1]
  • நம் வாழ்வில் துன்ப நிகழ்வுகள், இன்பத்தின் அடித்தளம் என்பதை நாம் எண்ணாமல் வேதனையில் வெந்து விரக்தியால் சாகலாமா?[1]
  • மகிழ்ச்சியை எப்படி வரவேற்று மகிழ்கிறாயோ அப்படியே உனக்கேற்படும் துன்பத்தையும் ஏற்றுப் பழகுக.[1]
  • கடின உழைப்பும், லேசான மனமும் , எதையும் எதிர்கொள்ளும் துணிவும் உள்ளவர்களுக்குத் தூக்கம் எட்டாக்கனி அல்ல; கிட்டா மருந்தல்ல.[1]
  • தூக்கம் நம்மை குளுமைப்படுத்தும் ஒரு மாமருந்து; புத்துணர்ச்சியைத் தரும் ஊக்க மருந்து.[1]
  • துன்பத்துள்தான் இன்பம் இருக்கிறது. எனவே துன்பத்தை எதிர்கொள்ள தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன்.[1]
  • இருட்டை நாம் குறை கூறுவதைவிட, ஆளுக்கு ஒரு சிமிழ் விளக்கை ஏற்றி ஒளி வீசச் செய்து இருட்டை விரட்டுவோம்.[1]
  • வாழ்வில், இல்லறத்தில் நாம் இருந்தாலும் அதிலுள்ள பல்வேறு சுமைகளை மறந்து, இன்பத்தில் திளைக்க உதவிடும் ஒரே அறம் தொண்டறம் ஆகும்.[1][1]
  • நாம் நண்பர்களைப் பகைவர்களாக்க அன்றாடம் முயலுவதைத் தவிர்த்துப் பகைவர்களையும் நண்பர்களாக்கிட முயல வேண்டும்.[1]
  • நகைச்சுவை உணர்வுடன் இருங்கள்; நகைச்சுவை உணர்வுதான் பல நேரங்களில் நம் உள்ளத்தில் பசுமையை வளர்க்கும்.[1]
  • ஒருவரின் திறமைக் குறைவை விட, நாணயக் குறைவே அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.[1]
  • நாணயம் என்பது நம்மைப்பற்றிய உண்மைகளை நம்மிடம் (நம் உள்ளத்துள்ளும்) பிறரிடம் ஒளிக்காமல் சொல்வதே.[1]
  • நமக்கு நெருக்கடி, வீழ்ச்சி, தோல்வி வரும் போது யார் நம்முடன் மாறாமல் நிற்கிறார்களோ, அவர்களே தலைசிறந்த நண்பர்கள்.[1]
  • மூளைக்கும் உணவு தேவைதானே? சிந்தனையைக் கூர்மைப்படுத்த - சானை தீட்ட அறிவுள்ள நூல்களே தக்க உணவுகள் அதற்கு.[1]
  • மதுவும், சூதாட்டமும் மனிதர்களின் மானத்தையும், அறிவையும் பறிக்கும் கேடு கெட்ட நோய்கள் என்பதை உணருங்கள்.[1]
  • பணத்தை நமது பணியாளனாக நடத்துங்கள், ஒரு போதும் பணத்தை எஜமான் ஆக விடாதீர்.[1]
  • குழந்தைகளிடம் பாசத்தைக் கொட்டுங்கள். அன்பை மழையாகப் பெய்யுங்கள், அரவணைத்து முத்தம் கொடுங்கள்.[1]
  • செயல் என்ற காற்று, துயரத்தைத் துரத்தி அடித்து விரட்டும், மறவாதீர்.[1]
  • பணிகளைப் பகுத்துத் தொகுக்கும் முறையை வகுத்துக் கொள்ளுங்கள்.[1]
  • படித்தவர் எண்ணிக்கை பெருகிய அளவுக்குப் பண்பாளர்கள் எண்ணிக்கை பெருகவில்லையே.[1]
  • ஒருவரை நாம் அறிவாளியாகக் கருதுவதுகூட, உரையாடும் போது அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பொறுத்ததே.[1]
  • சிக்கலான பிரச்சனை வரும்போது சிங்கம்போல சிலிர்த்து எழுங்கள்! நரிகள் வளைகளைத் தேடுவது போல் ஓடாதீர்கள்![1]
  • நம்மைப்பற்றி விமர்சனங்களை மற்றவர் செய்யும் போது, அது உண்மையாயிருந்தால் தாராள மனதோடு ஏற்றுத் திருத்திக்கொண்டு வாழ முயற்சியுங்கள்.[1]
  • எதையும் ஏற்றுப் பழகி, தீர்வு காணுவது எப்படி என்று திட சித்தத்துடன் அப்பிரச்சினையினை அலசி ஆராய்ந்தால், தீர்வு தென்பட்டே தீரும்.[1]
  • மனிதன் புகழ் ஆசை என்ற போதை ஏற ஏற மன நிறைவு கொள்ளத் தெரியாதவனாக ஆகிவிடுகிறான்.[1]
  • இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும்; புகழ் ஓட்டமும் அதுபோலத்தான், அதுதான் சீரிய உடல் நலத்திற்கு அடையாளம்.[1]
  • உங்களை ஒருவர் ஆத்திரமூட்டும் போதும், எரிச்சல் ஏற்படுத்தும் போதும் அதனை ஓர் அலட்சியப் புன்னகையோடு எதிர் கொள்ளுங்கள், அதற்குப் பதில் அளிக்காதீர்கள்; மதிப்பளிக்காதீர்கள்.[1]
  • இன்பத்தினை அடைய சிரிப்பு ஒரு திறவுகோல், அது மட்டுமல்ல, நம்மை மனிதம் மலர்ந்தவர்களாக காட்டிக் கொள்வதும் அச்சிரிப்புதான்.[1]
  • கடிகாரம் ஓடும் முன் ஓட பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்போம்.[1]

சான்றுகள் தொகு

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 1.24 1.25 1.26 1.27 1.28 1.29 1.30 1.31 1.32 1.33 1.34 1.35 1.36 1.37 1.38 1.39 1.40 1.41 1.42 1.43 1.44 1.45 1.46 1.47 1.48 1.49 1.50 1.51 1.52 1.53 1.54 1.55 1.56 1.57 1.58 1.59 1.60 1.61 1.62 1.63 1.64 1.65 1.66 1.67 1.68 1.69 1.70 1.71 1.72 1.73 1.74 1.75 1.76 1.77 1.78 1.79 1.80 1.81 1.82 1.83 1.84 1.85 1.86 1.87 1.88 1.89 1.90 1.91 1.92 1.93 1.94 1.95 1.96 1.97 பகுத்தறிவாளர் நாட்குறிப்பு 2013 ஒவ்வொரு நாளினுடைய தலைப்பு பகுதியிலும் உள்ளது
"https://ta.wikiquote.org/w/index.php?title=கி._வீரமணி&oldid=15287" இலிருந்து மீள்விக்கப்பட்டது