காந்தி (திரைப்படம்)

1982 திரைப்படம்

அஹிம்சை வழியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய மகாத்மா காந்தியின் வாழ்கை வரலாற்றை சித்தரித்து 1982-ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில திரைப்படம் காந்தி .

இத்திரைப்படத்தை எழுதியவர் ப்ரைலே , இயக்கியவர் ரிச்சர்ட் அட்டன்பரோ.
அவரது வெற்றி உலகை முற்றிலுமாக மாற்றியது.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தொகு

  • என்னை லண்டனில் உள்ள வழக்குரைஞர் சபை அழைத்தார்கள் , மற்றும் ச்சான்செரி உயர்நீதிமன்றத்தில் சேர்த்தார்கள். ஆதலால், நான் ஒரு வழக்குரைஞர். உங்கள் கண்களில் நான் ஒரு மாநிறம் கொண்டவனாக தெரிந்தால், தென் ஆப்பிரிக்காவில் ஒரு மாநிற வழக்குரைஞராவது இருக்கிறாரே என்று தான் நாம் கருதலாம் என்று நினைக்கிறன்.
  • என் மனம் தளரும் சமயத்தில், உண்மை மற்றும் அன்பின் வழி சென்றவை தான் என்றும் வென்றிருக்கிறது என்பதனை ஞாபகத்தில் வைத்து கொள்வேன். வீழ்த்த முடியாது என்று எண்ணும் அளவிற்கு கொடுங்கோலர்கள் மற்றும் கொலைகாரர்கள் இருக்கலாம்,ஆனால் கடைசியில்,அவர்கள் தோற்பார்கள். எப்பொழுதும் தோற்பார்கள்.
  • பழிக்கு பழியாக கண்களை பிடுங்கி கொண்டால் , குருடர்கள் மட்டுமே உலகில் இருப்பர்.
  • என் உடலை வருத்தலாம்,எலும்புகளை உடைக்கலாம்,என்னை கொல்ல கூட செய்யலாம், அப்பொழுதும் அவர்களிடம் என் இறந்த உடல் மட்டுமே மிஞ்சும். எனது ஒத்துழைப்பு அவர்களுக்கு என்றுமே கிடைக்காது.
  • நீங்கள் மாற்றான் வீடு முதலாளி என்பதனை புரியும் காலம் வந்துவிட்டது. உங்களில் சிலரிடம் சிறந்த நோக்கங்கள் இருக்கலாம், எனினும் எங்களை கீழ்படுத்தி தான் கட்டுக்குள் கொண்டு வர முடியும். இந்த கொள்கைக்கு தளபதி டயர் ஓர் கொடிய உதாரணம்... நீங்கள் கிளம்பியிருக்கணும்.
  • நான் ஓர் இஸ்லாமியர் மற்றும் ஓர் ஹிந்து மற்றும் ஓர் கிறிஸ்த்துவர் மற்றும் ஓர் யூதர் , அவ்வாறே நீங்கள் அனைவரும்.
  • அவர்களை பதிலளிக்க தூண்டுவது தான் இந்த உரிமைசார்ந்த எதிர்ப்பின் நோக்கம்.அவர்கள் பதில் அளிக்கும் வரையோ அல்லது சட்டத்தை மாற்றும் வரையிலோ நாங்கள் தொடர்ந்து தூண்டிக்கொண்டே இருப்போம். ஓங்கி இருப்பது அவர்களின் கைகள் அல்ல; எங்களது.
  • நீங்கள் சிருபான்மையினர்களில் ஒருவராயினும், உண்மை என்றும் உண்மை தான்.
  • அட கடவுளே.

வசனங்கள் தொகு

பட்டேல்: பாபுஜி, ஒட்டுமொத்த நாடே செயல்படுகிறது.
காந்தி: ஆமாம். ஆனால் எத்திசையில்?

ஜின்னா: [இந்தியா முழுதும் நடைபெற்ற இந்து-இஸ்லாமியர் கலவரத்துக்கு பின்னர்] நீங்கள் தான் இந்த தேசத்தின் தந்தை.
காந்தி: அவ்வாறு என்னை அழைப்பதை இன்று நான் அவமானமாக நினைக்கிறேன்.

நஹாரி: எனக்கு நரகம் தான்! நான் ஓர் குழந்தையை கொன்றுள்ளேன்! அவனது தலையை சுவற்றில் அடித்து கொன்றுள்ளேன்.
காந்தி: ஏன்?
நஹாரி: ஏனென்றால் அவர்கள் எனது பிள்ளையை கொன்றார்கள்! இஸ்லாமியர்கள் எனது பிள்ளையை கொன்றார்கள்!
காந்தி: நீங்கள் நரகம் செல்லாமல் இருக்க ஓர் வழி உண்டு. இக்கலவரத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த ஓர் குழந்தையை கண்டுபிடித்து அவனை வளர்த்துக்கொள். ஆனால் அவன் ஓர் இஸ்லாமியனாக இருக்கணும் மற்றும் அவனை நீ ஓர் இஸ்லாமியனாக வளர்க்க வேண்டும்.

கின்னோச்: திரு காந்தி அவர்களே, பிரிட்டிஷ் ஆட்சி இல்லையெனில்,இந்நாடு கலவர பூமியாகி விடும்.
காந்தி:திரு கின்னோச் அவர்களே, சுயாட்சியை தவிர்த்து அந்நிய சக்தியின் நல்லாட்சியில் இருப்பதனை இந்த உலகில் யாருமே விரும்பமாட்டார்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ப்ரிகேடியர்: அன்புள்ள அய்யா!இந்தியா வேறு,பிரிட்டிஷ் வேறல்ல.நாங்கள் ஒரு அந்நிய சக்தியும் அல்ல.

அரசு தரப்பு வழக்குரைஞர்:தளபதி டயர் அவர்களே, மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடத்தை குறி வைத்து சுட சொல்லி நீங்கள் உத்தரவிட்டது உண்மை தானா?
தளபதி டயர்: அப்படி தான்.
அரசு தரப்பு வழக்குரைஞர்:ஆயிரத்தி அறுநூற்றி ஐம்பது தோட்டாக்கள் கொண்டு ஆயிரத்து ஐநூற்றி பதினாறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தளபதி டயர்: இந்தியா முழுதும் எதிரொலிக்கும் வகையில் ஓர் பாடம் புகட்டுவதே எனது நோக்கம்.
இந்திய வழக்குரைஞர்:தளபதி அவர்களே, கவச தானுந்தில் தாங்கள் அமர வாய்ப்பு இருந்திருந்தால், இயந்திர துப்பாக்கியை மக்கள் மீது இயக்கி இருப்பீர்களா?
தளபதி டயர்: ஆமாம் என்று தான் நினைக்கிறன்.
ஹன்டர் எஜமான்:தளபதி அவர்களே, அக்கூட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் இருந்ததை நீங்கள் உணர்ந்தீர்களா?
தளபதி டயர்: நான் உணர்ந்தேன்.
அரசு தரப்பு வழக்குரைஞர்:ஆனால், நீங்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறீர்கள்?
தளபதி டயர்: ஆமாம்.
அரசு தரப்பு வழக்குரைஞர்: நீங்கள் காயமுற்றவர்களுக்கு என்ன செய்தீர்கள்?
தளபதி டயர்: உதவி கேட்ட எவருக்கும் உதவி செய்ய நான் தயாராக இருந்தேன்.
அரசு தரப்பு வழக்குரைஞர்: தளபதி அவர்களே, .303 லீ என்பீல்ட் துப்பாக்கியால் காயமுற்ற ஓர் குழந்தை எவ்வாறு உதவி கேட்கும்?

வெளி இணைப்புக்கள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


"https://ta.wikiquote.org/w/index.php?title=காந்தி_(திரைப்படம்)&oldid=11490" இலிருந்து மீள்விக்கப்பட்டது