கட்டுரை

ஒரு எழுத்தாளரின் தனிப்பட்ட கண்ணோட்டத்தில் பெரும்பாலும் எழுதப்பட்ட ஒன்று

கட்டுரை என்பது கதை அல்லாத இலக்கிய வடிமாகும்,

மேற்கோள்கள்

தொகு
  • கதை எழுத நிகழ்ச்சிகள் உதவுகின்றன. அதனால் பலர் கதை எழுதலாம். கட்டுரை எழுதச் சிந்தனை வேண்டும். ஒரு பொருளைப் பற்றிச் சிந்தித்துப் பல பக்கங்கள் அட்ங்கிய நூலாக எழுதவேண்டுமானல் பரந்த அறிவும் ஆழ்ந்த சிந்தனையும் வேண்டும். — கி. வா. ஜகந்நாதன்[1]
  • "பகுப்பாய்வுக்கான (analysis) ஒரு வடிவம் கட்டுரை", "விவாதித்து விபரிப்பதே" அதன் பண்பு க. சிவத்தம்பி
  • ஒரு பொருள்பற்றி சிந்தித்துச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை -க. சொக்கலிங்கம்
  • கட்டுரை எழுதும்பொழுது பொருள் ஒழுங்கு, சொல் தெரிவு, சிறு வாக்கிய அமைப்பு, பந்தி அமைப்பு, குறியீடுகள் உபயோகம் என்பவற்றில் கவனம் தேவை -க. சொக்கலிங்கம்
  • தெளிவு, ஆடம்பரமின்றி ஒன்றை நேராக் கூறல், சுருங்கிய சொல்லால் விரிந்த பொருளை குறித்தல், குறிப்பாற் பொருளை சுட்டுதல்" போன்ற பண்புகள் கட்டுரையில் பேணப்பட வேண்டும். _(வி. செல்வநாயகம்)

குறிப்புகள்

தொகு
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=கட்டுரை&oldid=18280" இலிருந்து மீள்விக்கப்பட்டது