ஓப்ரா வின்ஃப்ரே

அமெரிக்க பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகை, தயாரிப்பாளர், மற்றும் எழுத்தாளர் (பிறப்பு 1954)

ஓப்ரா கைல் வின்ஃப்ரே (பிறப்பு சனவரி 29, 1954) ஓர் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரட்டைக் காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் வள்ளல். இவர் தன்பெயரைக் கொண்டு நடத்தும் ஓப்ரா வின்ஃப்ரே ஷோ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி இத்தைகைய வகை நிகழ்ச்சிகளின் வரலாற்றிலேயே மிகவும் உயர்ந்த மதிப்பீடுகளைப் பெற்று பல விருதுகளை வென்றுள்ளது.

ஒப்ரா வின்ஃப்ரே (2004)

இவரது மேற்கோள்கள்

தொகு
  • எங்கு போராட்டம் இல்லையோ, அங்கு வலிமையும் இல்லை.
  • ஒருவர் தனது அணுகுமுறையை மாற்றுவதன் மூலம், தனது எதிர்காலத்தையே மாற்ற முடியும் என்பதே அனைத்து காலத்திற்குமான மிகச்சிறந்த கண்டுபிடிப்பு.
  • மேன்மை அடைவதற்கான மற்றுமொரு மைல்கல்லே தோல்வி
  • உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்பவர்கள் மட்டுமே உங்களைச்சுற்றி இருக்க வேண்டும்.
  • உங்களது காயங்களை ஞானமாக மாற்றுங்கள்.
  • உங்கள் உள்ளுணர்வுகளைப் பின்பற்றுங்கள். அங்குதான் உண்மையான ஞானம் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.
  • இந்த கணத்தில் சிறந்ததை செய்வது. அடுத்த கணத்திற்கான சிறந்த இடத்தில் உங்களை வைக்கிறது.
  • நீங்கள் உங்கள் வாழ்க்கையின் இலக்குகளை அடைய வேண்டுமானால், அதற்கான ஊக்கத்துடன் செயலைத் தொடங்க வேண்டும்.
  • நீங்கள் இங்கு எப்படி இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியமே தவிர, இந்த உலகிற்கு எப்படி வந்தீர்கள் என்பது ஒரு விசயமே அல்ல.
  • எனக்கு நண்பர்கள் யாரும் இல்லாதபோது, என்னிடம் புத்தகங்கள் இருந்தன.
  • நான் தோல்விகளை நம்புவதில்லை. நீங்கள் உங்கள் செயலை அனுபவித்து செய்துள்ளீர்கள் என்றால், அது தோல்வியே அல்ல.
  • முன்னேற்பாடு எப்பொழுது வாய்ப்பினை சந்திக்கிறதோ அதுவே அதிர்ஷ்டம் எனப்படுகிறது.
  • ஒவ்வொரு தடுமாற்றமும் வீழ்ச்சி அல்ல மற்றும் ஒவ்வொரு வீழ்ச்சியும் தோல்வி என்று அர்த்தமல்ல.
  • மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப்பற்றி வெற்றிகரமான மக்கள் ஒருபோதும் கவலைப் படுவதில்லை.[1]

குறிப்புகள்

தொகு
  1. வெற்றி மொழி, ஓப்ரா வின்ஃப்ரே, வணிக வீதி, தி இந்து இணைப்பு, 2016 செப்பம்பர் 19
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஓப்ரா_வின்ஃப்ரே&oldid=14500" இலிருந்து மீள்விக்கப்பட்டது