ஐயம்
ஐயம் என்பது நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடைப்பட்ட ஒரு நிலை ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- நாம் கொஞ்சம் அறிந்திருந்தால், தெளிவாகக் கண்டு கொள்வோம்; அறிவு மிகுந்தால் சந்தேகமும் அதிகமாகிவிடும். -கதே[1]
- சந்தேகமே கொள்ளாதவன் அரை நம்பிக்கைகூட இல்லாதவன், சந்தேகமுள்ள இடத்தில் உண்மையும் இருக்கும். அது உண்மையின் சாயல். - பெய்லி[1]
- ஆராய்ச்சிக்கு முன்வாயிலைத் திறக்காவிட்டால் சந்தேகம் சாளரத்தின் வழியாக வரும். -ஜோபெட்[1]
- சந்தேகம் தீர்ந்தால் ஓய்வு ஆரம்பமாகும். - டெட்ராக்[1]
- மானிட ஆன்மாவின் சந்தேகம் நரகமாகும். - காஸ்பரின்[1]