ஏர்ல் நைட்டிங்கேல்

ஏர்ல் நைட்டிங்கேல் (Earl Nightingale 1921, மார்ச் 12 – 1989, மார்ச், 28)1921 என்பவர் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்வாய்த வானொலி பேச்சாளர், எழுத்தாளர், பேச்சாளர், மெய்யியலாளர் ஆவார். இவரது படைப்புகள் பெரும்பாலும் மனிதத்தன்மை மேம்பாடு, ஊக்கமூட்டல் ஆகியவற்றை அடிப்படையாக அமைந்தவை ஆகும். இவரது புத்தகங்கள் மற்றும் ஒலிப் புத்தகங்கள் விற்பனையில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்துள்ளன.

இவரின் பொன்மொழிகள்[1]

தொகு
  • மற்றவர்களை நோக்கிய நமது அணுகுமுறையே, நம்மை நோக்கிய அவர்களது அணுகுமுறையைத் தீர்மானிக்கின்றது.
  • நமக்கான வெகுமதிகள் எப்போதும் நமது சேவைக்கான சரியான விகிதத்தில் இருக்கும்.
  • நமது தற்போதைய கம்பீரமான எண்ணங்களின் திசையிலேயே மனதின் நகர்வுகள் அமைகின்றன.
  • எங்கு சரியான திட்டமிடல் இல்லையோ அங்கு உங்களால் சலிப்பைக் காணமுடியும்.
  • நமது ஆர்வம் மற்றும் உற்சாகத்தின் விரிவாக்கப்பட்ட செயல்பாடே படைப்பாற்றல்.
  • பெரிய விஷயம் என்னவென்றால், உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்திருப்பதே.
  • நாம் வாழும் இந்த உலகமானது, நமது அணுகுமுறை மற்றும் எதிர்பார்ப்புகளின் கண்ணாடியினைப் போன்றது.
  • இலக்கு உடையவர்களே வெற்றிபெறுகிறார்கள் ஏனென்றால், எங்கு செல்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியும்.
  • ஒவ்வொரு விசயமும் திட்டத்தின் மூலமே தொடங்குகின்றது.
  • நமது ஆழ் மனதில் நாம் பதியக்கூடிய எதுவாயினும், ஒருநாள் அது உண்மையாகும்.
  • திட்டம், வழிமுறை மற்றும் இலக்கை நோக்கிய அழுத்தத்திற்கான தைரியம் ஆகியவையே உங்கள் அனைவரின் தேவை.
  • உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
  • உட்புறத்தில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்புறத்தில் தெரிந்துவிடுகின்றது.

வெளியிணைப்புக்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


குறிப்புகள்

தொகு
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஏர்ல்_நைட்டிங்கேல்&oldid=14364" இலிருந்து மீள்விக்கப்பட்டது