ஏமாற்றம் (Disappointment) என்பது எதிர்பார்ப்புகள் நிறைவேராததைதத் தொடர்ந்து வரும் அதிருப்தி உணர்வு.

  • ஒரு சமயம் ஒரு வயோதிகன் சொன்னதாவது நான் இளைஞனாயிருக்கையில், நான் ஏழையாயிருந்தேன். வயதான காலத்தில், நான் செல்வனானேன். ஆனால், ஒவ்வொரு நிலையிலும் நான் ஏமாற்றத்தைக் கண்டேன். அனுபவிக்கக்கூடிய ஆற்றலிருந்த சமயத்தில் எனக்கு வசதியில்லை வசதிகள் வந்த பின்பு ஆற்றல்கள் போய்விட்டன. -திருமதி காஸ்பரின்[1]
  • நாம் ஆர்வத்துடன் போற்றும் திட்டங்கள் சிதைந்து கிடப்பதன்மூலமே நாம் சுவர்க்கப் பாதையில் முன்னேறுகிறோம். நம் தோல்விகள் வெற்றிகளே என்றும் கண்டுகொள்கிறோம். -ஏ. பி. ஆங்காட்[1]
  • நம்பிக்கையின் அடிச்சுவடுகளையே ஏமாற்றமும் பின்பற்றிச் செல்கின்றது. [1]
  • ஏமாற்றுக்காரர்களே சமூக உறுப்பினர்களுள் மிகவும் அபாயமானவர்கள். நம் இயற்கையின்படி நாம் காட்டும் பிரியத்திற்கும். ஆதரவுகளுக்கும் அவர்கள் துரோகம் செய்கின்றனர். மிகவும் புனிதமான கடமைகளைக்கூட மீறி நடக்கின்றனர். - கிராப்[1]
  • ஒரு நல்ல காரியத்திற்காக நாம் ஒரு நாளும் , ஏமாற்றுவதில்லை. இழிதகைமை பொய்யுடன் தீய எண்ணத்தையும் சேர்த்துவிடுகின்றது. -புரூயெர்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 139. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஏமாற்றம்&oldid=20642" இலிருந்து மீள்விக்கப்பட்டது