எஸ்தோனிய பழமொழிகள்
இப்பக்கத்தில் எஸ்தோனிய மொழி பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.
- அதிகாலையில் எழுந்தவனும், இளமையில் மணந்தவனும் வருந்தியதில்லை.
- அருமையான குழந்தைக்குப் பிரம்பு தேவை.
- அழகான பெண் கண்ணுக்குத்தான் சுவர்க்கம், ஆனால் பணப்பைக்குச் சனியன், ஆன்மாவுக்கு நரகம்.
- எல்லாப் பெண்களும் நல்லவர்களா யிருக்கும் பொழுது, கெட்ட மனைவியர் எங்கிருந்து வருகின்றனர்?
- ஒரு பெண் மற்றொருத்தியைப் புகழ்ந்து ஒரு போதும் பேசமாட்டாள்.
- ஒரு பெண்ணின் பாவு ஒன்பது பெண்களின் ஊடு.
- உதிரம் நீரைவிடச் சூடுள்ளது.
- உலகத்திற்கெல்லாம் தெரிய வேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் சொன்னால் போதும்.
- ஊசியில்லாத பெண் நகமில்லாத பூனை. (தையல் வேலை பெண்ணுக்கு அவசியம்.)
- கணவன் தலை, மனைவி இதயம்- இப்படியுள்ள திருமணம். இன்பமானது.
- கப்பல், குதிரை, அல்லது மனைவியை மற்றவரை நம்பி ஒப்படைக்காதே.
- கன்னியா யிருக்கும் பொழுது மாடப்புறாவா யிருந்தவள் மனைவியான பின் தண்டாயுதமாகி விட்டாள்.
- காதலில் துரு ஏறாது.
- கிழட்டுப் பசுவுக்குத் தான் கன்றாயிருந்தது நினை விராது.
- கிழவருக்கு மரணம் கண் முன்னால் நிற்கும், இளைஞருக்குப் பின்புறம் நிற்கும்.
- கிழவிகளையும், ஓநாய்களையும் படைத்து, இறைவன். உலகைப் பாழாக்கி விட்டான்.
- குதிரையையும் மனைவியையும் இலகானில்லாமல் உபயோகிக்க வேண்டாம்.
- குருட்டுக் கோழிக்கும் ஒரு தானியம் கிடைக்கின்றது, குடிகாரனுக்கும் ஒரு மனைவி கிடைக்கிறாள்.
- குழந்தையின் அருமை அடுத்த குழந்தை வரும்வரை.
- குழந்தையின் ரொட்டியில் மணல் கலந்திருக்கும்.
- கைம்பெண் கூரையில்லாத கட்டடம்.
(மனைவியில்லாதவனுக்கும் இது பொருந்தும்.) - சட்டை உடம்போடு ஒட்டியிருக்கும், அதைவிட ஒட்டியுள்ளது மரணம்.
- சமையல் மோசமானால், ஒரு நாள் நஷ்டம்; அறுவடை. மோசமானால், ஒரு வருட நஷ்டம்; விவாகம் மோசமானால் ஆயுள் முழுவதும் நஷ்டம்.
- செழிப்பான பண்ணையிலிருந்து குதிரையை வாங்கு; ஏழைப் பண்ணையிலிருந்து பெண்ணை வாங்கு.
- தந்தையின் அன்பு கல்லறை வரை; தாயின் அன்பு உலகுள்ள வரை.
- தாடி ஒரு மனிதனுக்குக் கௌரவம்; மனைவி அவன் கருவி.
- தாயில்லாத மறியை எல்லாக் குட்டிகளும் முட்டும்.
- திருமணப் பெண்ணுக்கு இசையும் அழகும்; விவாகமான பின் பசியும் தாகமும்.
- தொட்டிலைத் தாங்குபவள் கிழவி, அவளே குழந்தையின் கைதி.
- தொடக்கத்தில் இருவரும் ஒரே சட்டைக்குள் ஒண்டியிருக்க முடிந்தது; பின்னால் அவர்கள் ஒரே குடிசையில் சேர்ந்திருக்க முடியவில்லை.
- நாலு மரக்கால் நிலக்கரி கொடுத்தால், ஒரு நாயகன் கிடைப்பான்; ஆனால் ஒரு 'டன்' கோதுமை கொடுத்தால் தான் ஒரு பெண் கிடைப்பாள்.
- பயமில்லாமல் வளரும் குழந்தை பெருமையில்லாமல் மரிக்கும்.
- பழைய துணி-புதிய கிழிசல்.
- பிறக்கும் பொழுது அழுதுகொண்டு வந்தோம், போகும் பொழுதாவது சிரித்துக்கொண்டு செல்லும்படி வாழ வேண்டும்.
- பிறர் புகழும் குதிரையை வாங்கு, பிறர் குறை பேசும் பெண்ணை மணந்துகொள்.
- புதர்களெல்லாம் பெண் இனம். [பெருகக் கூடியவை.]
- பெண் குழந்தை வீட்டிலிருப்பதைக் கொண்டு செல்லும், ஆண் குழந்தை (வெளியிலிருந்து) கொண்டுவரும்.
- பெண் குழந்தைகள் வீட்டுக்கு அலங்காரம், அவர்கள் விற்பனைக்குரிய பொருள்கள்.
- மகள் உன் முட்டளவு வளர்ந்து விட்டால், அவளுடைய சீதனப்பெட்டி அவள் மார்பளவு உயரம் இருக்க வேண்டும்.
- மனிதன் மரணத்தின் குழந்தை.
- மனிதன் இருமுறை குழந்தை.
- மனிதனுக்கு மனைவி வாய்த்தே தீருவாள்.
- மனிதனின் பூட்டு மனைவி.
- மனிதன் முதுமையடைகிறான், ஆனால் பிணி இளமையடைகின்றது.
- மனைவி ஒருமுழம் தள்ளி யிருந்தாலும், அந்த அளவுக்கு மனிதன் சுதந்திரமுள்ளவன்.
- மனிதன் வாழ்க்கையை மனைவியே பாழாக்குகிறாள்.
- மாதாகோயிலுக்குச் செல்லும் பாதையிலிருந்து கொண்டு உனக்கு மனைவியைத் தேர்ந்தெடுக்காதே.
- வசந்த காலம் வந்து குழந்தையை முத்தமிடுகிறது, மாரிக் காலம் வந்து அதை வதைக்கிறது.
- வயது முதிர்ந்தவன் நெடு நாளைக்குக் குழந்தையாயிருப்பான்.
- வாழ்க்கை ஒரு போராட்டம்.
- வானத்தில் பறவையின் பாதையைக் காணமுடியாது, கன்னியை நாடும் காதலன் பாதையையும் காண முடியாது.
- வீட்டைக் கட்டிப் பாராதவன் மண்ணிலிருந்து சுவர்கள் முளைத்திருப்பதாக எண்ணுவான்.
- வீடு இல்லாளின் உலகம், உலகம் மனிதனின் வீடு.