எழுத்து நடை

எழுத்து நடை என்பது ஒரு எழுத்தாளனின் தனிச்சிறப்பான எழுதும் முறையைக் குறிக்கிறது. இது குறித்த மேற்கோள்கள்

  • நடை என்ப 'சரியான சொற்களைச் சரியான இடங்களில் அமைத்தல்' என் விளக்கிச் சொல்லலாம். -ஸ்விஃப்ட்[1]
  • நீ எவ்வளவு அழகிய உடலைப் பெற்றிருந்தாலும், அழுக்கான, கிழிந்த கந்தல்களை நீ அணிந்திருந்தால், உனக்குச் சரியான வரவேற்பு இராது. அதுபோலவே, உன் கருத்துகள் எவ்வளவு நீதியானவைகளாயிருந்தபோதிலும், உன் எழுத்து நடை கரடு முருடாயும். நாகரிகமின்றியும். பாமர முறையிலும் இருந்தால், உன் எழுத்துக்குச் சரியான வரவேற்பு இராது நடைதான் கருத்துகளின் உடை. - செஸ்டர்ஃபீல்ட்[1]
  • தேவையற்றவைகளை ஒதுக்கித் தள்ளுவதிலிருந்து தெளிவான நடை ஏற்படும். - திருமதி நெக்கர்[1]
  • நடையில் வல்ல கலைஞனை அவன் கூறாமல் விடுகிற விஷயங்களிலிருந்தே நான் கண்டு கொள்கிறேன். -ஷில்லர்[1]
  • நடை. ஆளைக் காட்டிவிடும். - லத்தீனிலிருந்து[1]
  • ஓர் ஆசிரியர் தெளிவாயில்லை என்று குறைகூறும் வாசகன். தன் உள்ளத்தையும் பார்த்து, அங்கு எல்லாம் தெளிவாயிருக்கின்றனவா என்பதைக் கண்டுகொள்ள வேண்டும் எவ்வளவு தெளிவான எழுத்தாயிருந்தாலும், இருளில் கண்ணுக்குப் புலனாகாது. - கதே[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 136-137. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=எழுத்து_நடை&oldid=20619" இலிருந்து மீள்விக்கப்பட்டது