பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (Acquired immune deficiency syndrome) என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் (வைரசால்) ஏற்படுகிற ஒரு நோயாகும்.

Red Ribbon

இந்த நோய்குறித்த மேற்கோள்கள்

தொகு
  • எனக்கு எச்ஐவி பாசிட்டிவ், அற்புதமான நண்பர்கள், அன்பான பெற்றோரின் ஆதரவால் வாழ்க்கையை எளிதாக்கிக்கொண்டேன் - ஜி. வாலஸ், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆத்திரேலிய ஒலிம்பிக் வீர்ர்.
  • எச்ஐவி பாசிட்டிவ் மனிதர்கள் தைரியமாகத் தங்கள் அனுபவங்களைப் பகிரும்போதுதான் எயிட்சுக்கு எதிரான போராட்டம் வலுவடையும். - அலெக்ஸ் கார்னர், எச்ஐவி போராளி
  • எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுடன் கைகளைக் குலுக்குங்கள், கட்டி அணையுங்கள். இவைதான் அவர்களுக்குச் சிறந்த மருந்து. - இளவரசி டயானா
  • எச்ஐவி எயிட்ஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கடவுளின் தூதராக இருப்பதில் மகிழ்ச்சி- மேஜிக் ஜான்சன், அமெரிக்க கூடைப்பந்து வீரர்
  • எச்ஐவி குறித்த அறியாமையால் எந்த ஓர் உயிரையும் இழந்துவிடக்கூடாது. - எலிசபெத் டெயிலர், ஹாலிவுட் நடிகை
  • எச்ஐவி மறைக்கப்படவேண்டியது அல்ல, ஏனென்றால் மற்ற நோய்களைப்போல அதுவும் ஒரு நோய்தான் - நெல்சன் மண்டேலா

மேற்கோள்

தொகு
  • தி இந்து பெண் இன்று இணைப்பு 2016, திசம்பர் 4
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=எயிட்ஸ்&oldid=14806" இலிருந்து மீள்விக்கப்பட்டது