எம். பக்தவத்சலம்

தமிழக முன்னாள் முதல்வர்

எம். பக்தவத்சலம் (9 அக்டோபர் 1897 - 31 ஜனவரி 1987) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். விடுதலைப் போராட்டக் காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர். 1963 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிருவாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தியவர்.

பக்தவத்சலம் உருவச் சிலை

மேற்கோள்கள்

தொகு
  • எனது தமிழாசிரியர் உ. வே. சாமிநாத ஐயர். ஆங்கில ஆசிரியர் ஹென்றி ஸ்டோன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எனது தர்க்கப் பேராசிரியர்.
  • ஐரோப்பிய ஐ.சி.எஸ். அதிகாரிகள் நிறைய பேர் என்னிடம் பணியாற்றியிருக் கிறார்கள்; ஆனால், நான் ஒருபோதும் என்ன செய்யலாம் என்கிற முடிவை அவர்களிடம் கேட்டதில்லை.
  • கோயிலில் இருக்கும் தங்கக் குடங்களை நாட்டுக்குத் தரக் கூடாதா? அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இவ்வாறு கேட்டார்.
  • நானேதான் நில உச்சவரம்புச் சட்டத்திலிருந்து கோயில்களுக்கு விலக்களித்தேன். நானேதான் கோயில்களுக்கு நிலச் சொத்து சரிவராது என்றும் சொல்கிறேன்.
  • வடக்கத்தியர் எல்லோரும் ஆரியர்களா? அல்லது பிராமணர்கள் அல்லாத எல்லோரும் திராவிடர்களா? இனங்களும் பண்பாடுகளும் மதங்களும் சாதி களும்கூட கலந்து, நெருக்கி நெய்த துணியாக இந்தியா உருவாகியுள்ளது. இதன் இழைகளைப் பிரித்துக் குலைக்க வேண்டாம்.
  • புஷ்கரம், பிருந்தாவனத்தில் உள்ள கோயில்களும் வழிபாடும் காஞ்சிபுரத்தில் உள்ளதுபோல் இருக்கும். ராஜஸ்தானில் நம்மைப் போன்றே பொங்கல் கொண்டாடுவார்கள். முற்கால வரலாற்றில் இந்தப் பிரிவுகள் இருந்திருக்கலாம். பின்னர் எல்லாம் ஒன்றாகிப்போனதும் வரலாறுதானே?

பக்தவத்சலம் பற்றி பிறரது மேற்கோள்கள்

தொகு
  • பொதுவாழ்விலும் இருந்துகொண்டு தூய்மையாகவும் இருக்க முடியும் என்னும் உண்மையை வாழ்ந்து காட்டுபவர் பக்தவத்சலம். - முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.வி. அளகேசன்.
  • மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மனிதர். ஆனால், விமர்சனம் அவரை வருத்தாது. - முன்னாள் கேரள ஆளுநர் பா. ராமச்சந்திரன்.

புற இணைப்புகள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=எம்._பக்தவத்சலம்&oldid=13880" இலிருந்து மீள்விக்கப்பட்டது