எம். ஜி. இராமச்சந்திரன்

இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்

எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 - திசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.

மேற்கோள்கள்

தொகு
  • இலக்கியத்தை நான் கற்றேன் இல்லை. நான் நினைத்ததைப் பிறர் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு எனது மொழி எனக்கு உதவவேண்டும். அதுவரையில் எனது மொழியறிவு எனக்கு உதவுகிறது என்று நம்புகிறேன். (23-12-1975)[1]
  • என் வாழ்நாளில் இரண்டு தலைவர்களைப் பெற்றேன். ஒருவர் கலைவாணர் என். எஸ் கிருஷ்ணன். அவர் என்னுடைய கலைத்துறைத் தலைவர். இன்னொருவர் அறிஞர் அண்ணா. இவர் என்னுடைய அரசியல் தலைவர்: இந்த இரண்டு தலைவர்களையும் எனக்குத் தந்தவர் பெரியார். - (22-11-1964)[2]
  • கலை, மழையைப் போன்றது. வானத்தில் இருந்து நிலத்தில் விழும்வரை அதில் பேதம் இல்லை. ஆனால் அது எந்த நிலத்தில் விழுகிறதோ அதைப் பொறுத்து அதன் தன்மை மாறுகிறது. அது போலத்தான் கலையும். — (10-3-1962)[3]

நபர் குறித்த மேற்கோள்கள்

தொகு
  • பொதுவாக, தாய் வடிவத்தைத் தெய்வமாகப் போற்றும் பண்புடையவர் எம்.ஜி.ஆர்! - எம்.ஜி.ஆரைப் பற்றி சிவகுமார் கூறியது. [4]


 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்

தொகு
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 111-120. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  4. சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 149. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=எம்._ஜி._இராமச்சந்திரன்&oldid=18703" இலிருந்து மீள்விக்கப்பட்டது