எமிலி டிக்கின்சன்
அமெரிக்க கவிஞர் (1830-1886)
எமிலி டிக்கின்சன் (Emily Dickinson, டிசம்பர் 10, 1830 – மே 15, 1886) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞர் ஆவார். ஆங்கிலக் கவிதையுலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். இவர் ஐக்கிய அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
இவரது மேற்கோள்கள்
தொகு- ஒரு மனிதன் என்ன செய்கிறான் என்பதே அவனது நடத்தை. மாறாக, அவன் என்ன நினைக்கிறான், உணர்கிறான் அல்லது நம்புகிறான் என்பதல்ல.
- எதுவுமே சொல்லாமலிருப்பது... சில நேரங்களில் அதிகமானவற்றை சொல்கின்றது.
- தோல்விக்கு எல்லையை முடிவு செய். ஆனால், எல்லையற்ற முயற்சியைக் கொண்டிரு.
- உங்களது மூளையானது இந்த ஆகாயத்தை விட பறந்து விரிந்த ஒன்று.
- மன வலிமையை மேம்படுத்திக்கொள்ள மக்களுக்கு கடினமான தருணங்கள் தேவைப்படுகின்றன.
- எப்பொழுது விடியல் வருமென்று அறியாமல், ஒவ்வொரு கதவாக நான் திறக்கிறேன்.
- தனது சமூகத்தைத் தானே தேர்ந்தெடுக்கிறது ஆன்மா.
- அழிவில்லாத மற்றும் என்றென்றும் நிலைத்திருக்கும் விஷயமாக உள்ளது அன்பு.
- அமுதத்தின் சுவையை அறிந்துகொள்ள, வறுமையை அனுபவித்திருக்க வேண்டும்.
- நடந்து முடிந்தவை எல்லாம் ஒதுக்கப்பட வேண்டிய விஷயங்கள் அல்ல.
- ஒருபோதும் மீண்டும் திரும்ப வராத ஒன்றே, வாழ்க்கையை இனிமையானதாக மாற்றுகின்றது.
- உண்மையே எனது தேசம்.
சான்றுகள்
தொகு- வெற்றி மொழி: எமிலி டிக்கின்ஸன் (05 திசம்பர் 2016).