எந்திரன் (திரைப்படம்)
எந்திரன் 2010ல் வெளியான ஒரு அறிபுனை தமிழ்த் திரைப்படமாகும். சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கின்றார்கள். இப்படத்துக்கு ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்திருக்கின்றார்.
வசீகரன்
தொகு- (ச்சிட்டி தானியங்கியை அறிமுகப்படுத்துகிறார்) ஜென்டில்மேன் , இவன் ஒரு ஆள் ஒரு நூறு பேருக்கு சமம். நூறு பேரோட அறிவும், திறமையும் இவனுக்குள்ள ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கு. இவனுக்கு எல்லா கலைகளும் தெரியும், உலகின் எல்லா மொழிகளும் தெரியும்.
வசனங்கள்
தொகுவசீகரன்: நீங்க ச்சிட்டி கிட்ட ஏதாவது கேக்கறதுனா கேக்கலாம்.
பார்வையாளர் 1: சிம்பிளா கேக்கறேன். 24157817 ஃபிபோனாசி நம்பரா?
ச்சிட்டி: ஆமா, இருபத்தி இரண்டாவது ஃபிபோனாசி நம்பர். பை தி பை, அது மந்தவெளி பி சுப்ரமணித்தோட ஃபோன் நம்பர்.
பார்வையாளர் 2 :உனக்கு தெரிஞ்ச மிகப்பெரிய ப்ரைம் நம்பர் என்ன?
ச்சிட்டி: (மடிகணினியில் எண்களை அழுத்துகிறது) எம்44. இது சரியானு பார்க்க உங்களுக்கு சில வருஷங்கள் ஆகும்.
(கரகோஷம்) பார்வையாளர் 2 : குட்.
வெளிநாட்டு பார்வையாளர்: அமேசிங். இட்ஸ் கிரேட்.
பார்வையாளர் 3 : (எழுந்து ஆலாபனை செய்கிறார்) என்ன ராகம்?
ச்சிட்டி: நாட்டகுறிஞ்சி பாடறேன்னு சொல்லிடு ஹுசைனி போயிட்டீங்க. நடுவுல (அதே ஆலாபனையை திருத்தி பாடுகிறது) இந்த இடத்துல சுருதி விலகிருச்சு. (கரகோஷம்)
வசீகரன்: எனி மோர் கொஸ்டின்ஸ்?
பார்வையாளர் 4 : கடவுள் இருக்காறா? இல்லையா?
ச்சிட்டி: கடவுள்ன்னா யாரு?
பார்வையாளர் 4 : நம்மளையெல்லாம் படைச்சவர்.
ச்சிட்டி: என்னை படைச்சவர் டாக்டர் வசீகரன். கடவுள் இருக்காரு. (கரகோஷம்)