எதிலும் ஐயம்
எதிலும் ஐயம் குறித்த மேற்கோள்கள்
- அதிக அறிவிருந்தால் அதிக நம்பிக்கை இருக்கும் அறியாமைக்கு எப்பொழுதும் ஐயந்தான். - வில்மாட்[1]
- சில மனிதர்கள் தாங்கள் புரிந்துகொள்ளக்கூடிய விஷயங்களை மட்டுமே நம்புவர் அவர்கள் புரிந்துகொள்ளக்கூடியவையும் மிகச்சிலவே. - எவர்மாண்ட்[1]
- இழிவான இதயத்திற்கும். நலிவடைந்த மூளைக்கும் அறிகுறி எதிலும் ஐயப்படுதல், உண்மையான தத்துவ ஞானம் விஷயங்களை மறுத்துத் தள்ளாமல் விளக்கவே முற்படுகின்றது. - புல்வர்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 135. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.