எதிர்ப்பு (Opposition) குறித்த மேற்கோள்கள்

  • எதிரிப்பு ஊக்கமுள்ளவரை வெறி கொள்ளச் செய்யும் அவரை வேறு வழியில் திருப்புவதில்லை. - ஷில்லர்[1]
  • ஊக்கமுள்ள ஆன்மா சிரமமில்லாத வெற்றியை வெறுக்கின்றது. தாக்குவோனுடைய ஆவேசமும் தற்காத்துக்கொள்பவனுடைய வேகத்தை அதிகப்படுத்தும். - எமர்சன்[1]
  • உயர்ந்த உள்ளங்களுக்கு மகிழ்ச்சியளிப்பது வெற்றியன்று. போராட்டமேயாகும்.- மாண்டெலெம்பெர்ட் [1]
  • நம்முடன் மல்யுத்தம் செய்பவன் நம் நரம்புகளை முறுக்கேற்றி விடுகிறான். நம் திறமைகளைக் கூர்மைப்படுத்துகிறான். நமது எதிரியே நமக்குத் துணைவன். - பர்க்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 134-135. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=எதிர்ப்பு&oldid=20595" இலிருந்து மீள்விக்கப்பட்டது