எச். முஜீப் ரஹ்மான்
தமிழ் எழுத்தாளர்
எச்.முஜீப் ரஹ்மான் (செப்டம்பர் 28,1971) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவர் கதை, நாவல், விமர்சனம், ஆய்வு, குறும்படம், சூபித்துவம் போன்ற பல தளங்களில் இயங்கிவருகிறார்.பின் நவீனத்துவம், மார்க்சியம், பின்காலனியம், நாட்டாரியல் போன்ற கோட்பாடுகளில் தேர்ச்சியுடைய இவர் பல்வேறு கருத்தரங்குகளில் உரையாற்றியுள்ளார்.ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.சூபித்துவத்தில் ஆழ்ந்த தேர்ச்சியுடைய இவர் விஷயம் என்ற குறும்படத்தை வெளியிட்டுள்ளார். ஏலாதி, கரிசிலாங்கண்ணி உள்ளிட்ட சிற்றிதழ்களில் ஆசிரியராக இருந்துள்ளார். தற்போது திணை என்ற காலாண்டிதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிவருகிறார். கறுத்தவாவு என்ற இலக்கிய கூடுகை நிகழ்வை சில வருடங்கள் நடத்தினார்.ஏலாதி சிந்தனை பள்ளியின் ஸ்தாபகராகவும் சூஃபி பள்ளியின் நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார்.
மேற்கோள்கள்
தொகு- சிறந்த இலக்கியம் என்பது வாழ்வும்,அழகியலும் சமஅளவிற்கு பொருளைக் கொண்ட மொழி ஆகும்.
- வணிக இலக்கியத்தின் எழுச்சி ஒரு தேசத்தின் வீழ்ச்சியைக் குறிக்கிறது.
- இலக்கியத்தின் சிரமம் எழுதுவது அல்ல,நீங்கள் நினைப்பதை எழுதுவது ஆகும்.
- ஒவ்வொரு மனிதனும் நாவல்,ஒவ்வொரு நிகழ்வுகளும் சிறுகதை,ஒவ்வொரு வஸ்துவும் கவிதை.இது தான் இலக்கியம்
- இலக்கியத்தில் தான் உண்மையான வாழ்க்கையைக் காணலாம்.ஆனால் புனைவுகள் மூலம் தான் உண்மை சொல்ல முடிகிறது.
வெளியிணைப்புக்கள்
தொகு