எசுப்பானிய பழமொழிகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தப் பக்கத்தில் எசுப்பானிய மொழி பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

பழமொழிகள்தொகு

 • அடுப்படியிலேயே அடைகாக்கும் கணவன் விலாப்பக்கத்து வலி போன்றவன்.
 • அழகுக்கும் கற்புக்கும் இடைவிடாத போர் இருந்தே வரும்.
 • ஆடவர் அழகை ஒரு குணமாகப் பார்க்கின்றனர்; பெண்கள் குணத்தை அழகாகப் பார்க்கின்றனர்.
 • என் வீட்டுக்கு நானே ராஜா.
 • ஒரு காதல் மற்றொன்றை வெளியேற்றிவிடும்.
 • ஒரு மனிதனின் அதிருஷ்டமோ துரதிருஷ்டமோ அவன் மனைவிதான்.
 • ஒவ்வொரு மனிதனும் பொதுமக்களே
 • உனக்கு நல்ல மனைவி வேண்டுமானால், அவளை ஞாயிற்றுக் கிழமையில் தேர்ந்தெடுக்காதே.
 • உன் கணவனை ஒரு நண்பனைப் போல நேசி, ஆனால் பகைவனைப் போல எண்ணி அவனுக்கு அஞ்சி நட.
 • உன் மகளுக்குத் தக்க வரன் வந்தால், வெளியே போயிருக்கும் அவளுடைய தந்தையின் வரவைக்கூட எதிர்பார்க்க வேண்டாம்.
 • உன் மனைவி உன்னை ஒரு கூரையிலிருந்து குதிக்கச் சொன்னால், 'கடவுளே, அது தணிந்த கூரையா யிருக்கட்டும்!' என்று பிரார்த்தனை செய்து கொள்.
 • ஒரு பெண் அழகாயிருப்பதாக நாம் ஒரு முறை சொன்னால், அதையே சயித்தான் அவளிடம் பத்து முறை சொல்வான்.
 • ஒரு பெண்ணின் காதல் கூடையிலுள்ள தண்ணீர் போன்றது.
 • ஒரு மகனோடு இருப்பதைவிட, ஒற்றைக் கண்ணுடைய கணவனுடன் வாழ்வதே மேல்.
 • கடலில் உப்பைத்தான் பெறலாம், பெண்ணிடம் தீமையைத் தான் பெறலாம்.
 • கணவனைத் தெரிந்துக்கொள்ள மனைவியின் முகத்தைப் பாருங்கள்.
 • கற்புடைய கன்னியும், நொண்டியும் வீட்டிலேயேயிருப்பது மேல்.
 • காதலர் மற்றவர் கண்களெல்லாம் அவிந்து விட்டது போல எண்ணுவர்.
 • காதலிலும் மரணத்திலும் நம்வலிமை பயனில்லை.
 • காதலின் பார்வையில் செம்பு தங்கமாயிருக்கும், ஏழைமை செல்வமாகும்.
 • காதலுக்காகக் கலியாணம் செய்து கொள்பவன் துக்கத்தோடு வாழ வேண்டும்.
 • காதல் சுளுக்குப் போன்றது, இரண்டாம் தடவை அது எளிதில் வந்துவிடும்.
 • காதல் வெட்கப்பட்டால், அது உண்மையானதன்று.
 • கூவுகிற கோழியும், லத்தீன் படித்த பெண்ணும் நல்ல முடிவை அடைய மாட்டார்கள்.
 • கெட்ட ஸ்திரீகளைக் காவல் காப்பது வீண் வேலை.
 • சாளரக் கம்பிகளின் இடைவழியாகவே காதலுக்கு உயிர் வருகிறது.
 • 'சூப்'பிலும் காதலிலும் முதலாவது தான் சிறந்தது.
 • செயல்களே காதல், இனிமையான சொற்களல்ல.
 • சேவல் தன் குப்பை மேட்டிலிருந்துதான் கூவும், கோழி ஊரெங்கும் சுற்றிக் கூவி வரும்.
 • தன் முகத்தைப் பற்றியே பெருமைப்படும் பெண்ணால் வீடு பாழாகும்.
 • தன்னையே அதிகமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண் வீட்டை நாசாமாக்குவாள்.
 • திருமணம் என்ற கோணியில் தொண்ணூற் றொன்பது பாம்புகளும், ஒரு விலாங்கும் இருக்கும்.
 • திருமணம் செய்து கொள்ள உறுதி கொண்டவன் அண்டை அயலார்களைப் பார்த்துக் கொள்வது நல்லது.
 • திருமணம் செய்து கொண்டு அடங்கிக்கிட.
 • தேர்ந்தெடுப்பது என்பது காதலில் இல்லை
 • நன்றாக உடையணியும் ஒரு பெண் தன் கணவன் வேறு பெண்ணை நாடாமல் காத்துக் கொள்ளமுடியும்.
 • நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். ஏனெனில், அவன் துரோகம் செய்ய மாட்டான்.
 • நெருப்புக்குக் காற்று எப்படியோ, அப்படிக் காதலுக்குக் பிரிவு.
 • பெண்கள் கிடைத்ததை மதிக்கமாட்டார்கள், மறுத்ததையே விரும்பி வாடுவார்கள்.
 • மரணம் வரும் வரையில் எல்லாம் வாழ்க்கைதான்.
 • மனைவியைக் கௌரவிக்காதவன் தன்னையே குறைவு படுத்திக் கொள்கிறான்.
 • மிகவும் எச்சரிக்கையோடு நடப்பவர்கள் கற்பில் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
 • மூன்று பெண்களும், ஒரு தாயும்- ஆகத் தந்தைக்கு நான்கு சயித்தான்கள்.
 • விவாகமான மனிதன் ஒவ்வொருவனும் தன் மனைவி ஒருத்திதான் உலகிலே நல்லவள் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=எசுப்பானிய_பழமொழிகள்&oldid=37555" இருந்து மீள்விக்கப்பட்டது