உ. ஸ்ரீநிவாஸ்

உ. ஸ்ரீநிவாஸ் (Uppalapu Shrinivas, பிப்ரவரி 28, 1969 - செப்டம்பர் 19, 2014)[1] தென் இந்தியாவைச் சேர்ந்த மேண்டலின் இசைக் கலைஞர் ஆவார். இவரது இசையின் மூலாதாரம் கருநாடக இசை ஆகும். இவர் இங்கிலாந்து மற்றும் கனடா நாடுகளின் முன்னணி இசைக் கலைஞர்களுடன் (ஜாண் மெக் லெளக்லின், மைக்கேல் நெய்மென் மற்றும் மைக்கேல் ப்ரூக்) இணைந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

2009ல் ஒரு நிகழ்ச்சியின் போது

மேற்கோள்கள்தொகு

நபர் குறித்த மேற்கோள்கள்தொகு

  • மிகச்சிறிய வயதிலேயே, மிகச்சிறந்த புகழ் பெற்றவர். இங்கு மட்டுமின்றி, வெளிநாடுகளிலும், அவரது இசைக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. அவர் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
    • உ. ஸ்ரீநிவாஸ் அவர்களின் மரணத்தைப் பற்றி திரு. நல்லி குப்புசாமி கூறியது[1]
  • 'மாண்டலின்' சீனிவாசை போன்ற ஒரு தங்கமான மனிதரை யாரும் பார்த்திருக்க முடியாது. என்னுடைய மிகச் சிறந்த சகோதரர்.அவரை, இசைக்கலைஞர் என்று சொல்வதை விட, மகா இசை மேதை என்று தான் சொல்ல வேண்டும். அவரது மரணம் தந்த அதிர்ச்சியால், எனக்கு வார்த்தைகளே வரவில்லை.
    • உ. ஸ்ரீநிவாஸ் அவர்களின் மரணத்தைப் பற்றி பாடகர் திரு. ஹரிஹரன் கூறியது.[1]
  • அவருக்கும், எனக்கும், 20 ஆண்டுகளாக மிகச்சிறந்த நட்பு இருந்தது. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அவரது இசையை ரசித்திருக்கின்றனர். இசைத் துறையில் அவரது இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாதது.
    • உ. ஸ்ரீநிவாஸ் அவர்களின் மரணத்தைப் பற்றி கர்நாடக இசைப்பாடகி திருமதி. சுதா ரகுநாதன் கூறியது.[1]

வெளியிணைப்புக்கள்தொகு

விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்தொகு

"https://ta.wikiquote.org/w/index.php?title=உ._ஸ்ரீநிவாஸ்&oldid=14009" இருந்து மீள்விக்கப்பட்டது