உள்ளுணர்வு

உள்ளுணர்வு (Intuition) என்பது ஒரு அனுமானம் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  • விலங்குகளுக்குள்ள இந்த இயற்கை அறிவுக்கு மேலாக இயற்கையில் காணும் அறிவு கடந்த விஷயம் எதுவுமில்லை என்பது என் கருத்து. இந்த உணர்வு பகுத்தறிவுக்கு மேலே தோன்றுவது. ஆயினும், அதைவிட மிகவும் தாழ்ந்தது. -அடிஸன்[1]
  • பகுத்தறிவு முன்னேறி வளர்வது இயற்கை அறிவு நிலையாக நிற்பது. ஐயாயிரம் ஆண்டு காலமாகத் தேனீயின் கூட்டில் எவ்வித அபிவிருத்தியுமில்லை; நீர்நாயின் வீட்டிலும் மாறுதலில்லை. - கோல்டன்[1]
  • அபிவிருத்தியடையக்கூடிய பகுத்தறிவே மனிதனுக்கும் விலங்குக்குமுள்ள வேற்றுமை. டி. பின்னி[1]
  • பெருமை மிகுந்த ஒரு சமூக மக்களின் உள்ளுணர்வு அவர்களுடைய தலைசிறந்த அறிவாளர்களைவிட மேலான ஞானத்தைப பெற்றிருக்கிறது. -கோஸத்[1]
  • இயற்கை அறிவுக்கு மேலாகப் பகுத்தறிவை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக்கொள்ளுங்கள்; முதலாவதில் கடவுள் வழிகாட்டுகிறார்; இரண்டாவதில் மனிதன் வழி காட்டுகிறான். - போப்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 131. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=உள்ளுணர்வு&oldid=20526" இலிருந்து மீள்விக்கப்பட்டது