சட்டமெய்யியல், சட்டம் ஆகியவற்றில், உரிமை (Rights) என்பது, ஒரு பண்பட்ட சமுதாயத்தில், சட்டப்படி அல்லது ஒழுக்கநெறிப்படி; செயல், பொருள், ஏற்றுக்கொள்ளல் என்பவை தொடர்பில்; செய்தல் அல்லது செய்யாமல் இருத்தல், பெறுதல் அல்லது பெறாமல் இருத்தல் என்பவற்றுக்கான உரித்து ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  • எந்த மனிதனும் நியாயமானதைச் செய்வதற்குத்தான் உரிமையுண்டு; தன் விருப்பம் போல் செய்வதற்கு உரிமை யில்லை. - ஸி. ஸிம்மன்ஸ்[1]
  • ஒரு கடமை, சம்பந்தமில்லாத உரிமை கிடையாது. சட்டத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்படாத சுதந்தரம் கிடையாது. இடைவிடாத முயற்சியில்லாமல் பெருமை கிடையாது. - லீபெர்[1]
  • எல்லா மனிதர்களும் தம்மிடமிருந்து பிரிக்க முடியாத உரிமைகளை இறைவனால் அருளப்பெற்றுள்ளனர். இவைகளில் உயிர்ப்பாதுகாப்பு, சுதந்தரம், இன்பத்தை அடையும் முயற்சி ஆகியவை சேர்ந்துள்ளன. - ஜெஃப்பர்ஸன்[1]
  • உரிமைகளைப் பெற்றிருப்பதில் முதன்மையான சிறப்புகளுள் ஒன்று என்னவெனில், அவை உன் உரிமைகளேயாயினும், நீயாக அவைகளை விட்டுக்கொடுக்கலாம் என்பது. -ஜி. மாக்ர்டொனால்ட்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 125. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=உரிமை&oldid=20438" இலிருந்து மீள்விக்கப்பட்டது