உயில் (Will and testament) என்பது ஒருவர் இறப்பதற்கு முன்னர், தனது சொத்துக்களை தனது விருப்பப் படி, தனக்குப் பிடித்த நபருக்கு ஏற்படும் உரிமை குறித்து எழுதப்படும் ஆவணம் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  • உன் மரண காலத்தில் நீ விட்டுச்செல்வது தகராறுக்கு இடமில்லாததாய் இருக்கட்டும். இல்லையெனில், உன் சொத்துகளுக்கு வக்கீல்களே உன் வாரிசுகளாக விளங்குவார்கள். - எப். ஆஸ்போரின்[1]
  • சாகும்வரை இருப்பதைப் பங்கிட்டு அளிக்காதவர்கள், முடிந்தால் மேலும் அதை வைத்துக்கொண்டிருக்க எண்ணுவார்கள் என்று தெரிகின்றது. - பிஷப் ஹால்[1]
  • உன் வாழ்க்கையில் எனக்கு ஒன்றும் அளிக்காமல், உன் மரணத்திற்குப் பின் எனக்கு அளிப்பதாக உறுதி சொல்கிறாய். அப்படியானால் நான் எதை விரும்புவேன் என்பதை உனக்கு அறிவிருந்தால் நீ தெரிந்துகொள்வாய். - மார்ஷியல்[1]
  • உயிரோடிருக்கையில் எதையும் கொடாமல், இறந்த பிறகு தர்மங்கள் செய்ய ஏற்பாடு செய்வது வடிகட்டிய சுயநலமாகும். - கோல்டன்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 124. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=உயில்&oldid=20427" இலிருந்து மீள்விக்கப்பட்டது