உயிர்த் தியாகம்
(உயிர்த் தியாகி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உயிர்த் தியாகம் (Martyrdom) என்பது ஒரு உயர்ந்த இலட்சியத்துக்காக, கொண்ட கொள்கைக்காக/பிறர் நலத்துக்காக செய்யும் உயிர்த் தியாகம்; உயிர்த்துறவு
மேற்கோள்கள்
தொகு- உண்மைக்காக உயிரைத் தியாகம் செய்தல் ஒருவர் தம் சமயத்திற்காகவோ, நாட்டிற்காகவோ மரிப்பதன்று உலகத் திற்காக மரிப்பதாகும்.[1]
- உயிரை விடும் தியாகியைவிட உயிர்த் தியாகியாக வாழ்வது அதிகக் கஷ்டம், அதற்கு அதிக வல்லமை தேவை. - ஹொரேஸ்மான்[1]
- உலகின் இயல்பு. இறந்துபோன திருத்தொண்டர்களைப் புகழ்தலும், உயிரோடிருப்பவர்களைத் துன்புறுத்தலும். - என். ஹேர்[1]
- உயிர்த் தியாகிகளைப்பற்றிப் படிக்கும் பொழுது. நாமும் தியாகிகளாகிவிடலாம் என்று தோன்றுகிறது. ஆனால், செயலில் இறங்கும்பொழுது, ஒரு கடுஞ்சொல்லைக்கூட நம்மால் தாங்க முடிவதில்லை. - ஹன்னா மூர்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 124-125. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.