இளையராஜா
தமிழ் இசை அமைப்பாளர்
இளையராஜா (பிறப்பு: சூன் 2, 1943), இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- சிந்தனை இருந்தால் தெளிவு இருக்காது. சிந்தனை இல்லாமல் இருப்பதே தெளிவாக இருக்கும்.[1]
- ஒரு பாடல் என்றால் ஒரு உணர்வைச் சொல்ல வேண்டும் அல்லது ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும். ஆனால் ஒரு கவிஞனுக்கு தெரிய வேண்டியது எந்த வார்த்தைகளை இந்த மெட்டுக்கு எழுதக்கூடாது என்று தெரிய வேண்டும். ஒரு சிற்பிக்கு எந்தக் கல்லை நீக்க வேண்டும் என்று தெரிய வேண்டிய அவசியத்தைப்போல ஒரு கவிஞனுக்கு எந்த வார்த்தையை இதில் எழுதக்கூடாது என்பது தெரிய வேண்டும்.[2]
நபர் குறித்த மேற்கோள்கள்
தொகு- "... இன் ஷர்ட் பண்ணிய ஒடிசலான தேகதுடன் ஒரு பையன் வந்து நின்றான். தழையத்தழையக் கட்டிய வேட்டியும், நெற்றி நிறைய விபூதி குங்கும்முமாக இசையமைப்பாளர்களைப் பார்த்து பழகிய கண்களுக்கு, நெற்றி நிறைய விபூதி குங்குமுமாக இசையமைப்பாளர்களைப் பார்த்து பழகிய கண்களுக்கு, கவர்மென்ட் ஆபிஸ் குமாஸ்தாபோல இருந்த அந்த இளைஞனை, இசையமைப்பாளர் என என்னால் நம்ப முடியவில்லை. ஹார்மோனியம், கிடார் என ஏதாவது கையில் எடுத்து வந்திருந்தாலாவது நம்பியிருப்பேன். அதுவும் எடுத்து வரவில்லை. 'ஃபர்ஸ்ட் இம்பரஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன் என்பார்களே, ராஜா விழயத்தில் அது பொய்த்துப்போனது." -- முதல் முறையாக வாய்ப்பு தேடி வந்த இளையராஜாவைப் பற்றி பஞ்சு அருணாசலம் கூறியது.[3]
வெளியிணைப்புக்கள்
தொகு
சான்றுகள்
தொகு- ↑ இசைமூலம் இறைவனை காணமுடியும் ஈரோடு விழாவில் இளையராஜா பேச்சு. தினத்தந்தி (15 நவம்பர் 2015). Retrieved on 3 சூன் 2016.
- ↑ Raj Television (2020-09-22). என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு எத்தனையோ பாடல்களை எழுதி இருக்கிறார் வாலி - இளையராஜா பேட்டி.
- ↑ பஞ்சு அருணாசலம் (15 சூன் 2016). "திரைத்தொண்டர்". ஆனந்த விகடன்: 84-88.