இலத்தீன் பழமொழிகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தப் பக்கத்தில் இலத்தீன் மொழி பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

 • காதல் ஒருவகைப் போர் முறையாகும்.
 • காதலிக்கும் காலத்தில் ஜூபிடரும் கழுதையாவார். [ஜூபிடர்-தேவர்களின் அதிபதியான கடவுள். கிரீஸில் இவரை 'சீயஸ்' என்பர்.]
 • காதலின் தூதுவர்கள் கண்கள்.
 • காதலிலே தோன்றும் கோபம் போலியானது.
 • குதிரைகள் வாங்கும் போதும், பெண் எடுக்கும் போதும், உன் கண்களை இறுக மூடிக்கொண்டு, கடவுளின் பொறுப்பில் விட்டுவிடவும்.
 • கோபம் வந்த பெண் கரையில்லாத கடல்.
 • செல்வமுள்ள ஸ்திரீயைப்போல் சகிக்க முடியாதது வேறில்லை.
 • தன் குடும்பத்தை விட்டு ஓடுபவனுக்கு முடிவான இடம் இல்லை.
 • நன்றாக வாழ்வதற்குச் சொற்ப வாழ்வே போதுமானது.
 • நாம் வாழத் தொடங்கிக்கொண்டே யிருக்கிறோம், ஆனால் வாழ்வதில்லை.
 • நாம் வாழ்க்கையைச் சிறு துண்டுகளாக்கி வீணாக்குகிறோம்.
 • நாளையே மரிக்க வேண்டியவனைப் போல வாழ்ந்து கொண்டிரு.
 • நீ வாழ்ந்திருக்கும் வரை, எப்படி வாழவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டே யிரு.
 • தீய யோசனை சொல்வதில் பெண்கள் ஆடவர்களை வென்றுவிடுவார்கள்.
 • நம் சொந்த வீடே மற்ற வீடுகளைவிட மேலானது.
 • பழைய காதல் ஒரு சிறைச்சாலை.
 • பெண் மனிதனின் குழப்பம்.
 • பெண், விருப்போ வெறுப்போ அடையும் பொழுது, எதையும் செய்யத் துணிகிறாள்.
 • மனிதன் காற்றடைத்த ஒரு தோற்பை.
 • மனிதன் பகுத்தறிவுள்ள விலங்கு.
 • மனிதன் தனக்கு எவ்வளவு வேண்டியவனோ அதைவிட அதிகமாகத் தேவர்களுக்கு வேண்டியவன்.
 • மனிதனுக்கு மனிதன் ஓநாயாக இருக்கிறான்.
 • வாழ்க்கை பயன்படுத்தப் பெறுவதற்காகவே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இலத்தீன்_பழமொழிகள்&oldid=37401" இருந்து மீள்விக்கப்பட்டது