இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்
குறள்:314
![]() |
இந்த கட்டுரை விக்கிமேற்கோளின் கொள்கைகளுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்
உரைதொகு
பரிமேலழகர் உரை: இன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது: அவர் நாண நல் நயம் செய்துவிடல் - அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல். (மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.)
குன்றக்குடி அடிகளார் உரை: தமக்குத் தீங்கு செய்தாரை தண்டிக்கும் முறையாவது தீமை செய்தவர் வெட்கப்படும் அளவுக்கு நன்மையைச் செய்வதுடன், அவர் செய்த தீமையையும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடுதலாகும். பிறர் செய்த தீமையை நினைப்பதால் பகைமை உணர்வும், தாம் செய்த நன்மையை நினைப்பதால் தன் முனைப்பும் துளிர்க்கும்; அதனால் மறந்து விடுக என்கிறார். உளவியல் அடிப்படையில் ஒருவரைத் திருத்த, உடன்பாட்டு முறையிலே அணுகுதல் வேண்டும். பழிவாங்கும் உணர்வில் நின்ற ஒருவனை, "ஒறுத்தல், நாண" என்ற சொற்களின் வழி, பழி வாங்குதலுக்கு உடன்பட்டு நிற்பார் போலக் காட்டி அவன் வெகுளியைத் தணிய வைத்தப் பின், நன்னயம் செய்யும் நெறியில் ஆற்றுப்படுத்தும் (வழிபடுத்தும்) நிலையில் இக்குறள் அமைந்திருப்பது அறிக.
- மேலும் படிக: [1]