இந்திரா காந்தி

இந்திய அரசியல்வாதி மற்றும் பிரதமர்

இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார்.

இந்திரா காந்தி

இவரின் கருத்துகள்

தொகு
  • இரண்டு வகையானவர்கள் இருக்கிறார்கள், காரியங்களைச் செய்பவர்கள் முதல் வகை; அதற்கான அங்கீகாரத்தை எடுத்துக்கொள்பவர்கள் இரண்டாம் வகை முதல் வகையில் இடம்பிடிக்க முயற்சி செய்யுங்கள். அங்கேதான் போட்டி குறைவு.[1]
  • நான் கொள்கையில் மிகவும் நிலைபெற்றிருப்பவள். என் சொந்தக் காலில், சொந்தத் தத்துவத்தில் வலிமையுடன் நான் நிற்பேன். இதைவிட்டு நான் என்றுமே பிறர் தயவை நாடி, அடுத்தவர் காலில் நிற்பவள் அல்ல. குறிப்பாக எந்த மகானும், எந்தக் கடவுளும் எனக்குக் கை கொடுத்து உதவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. யாரையும் மகானாக எண்ணி குருவாக ஏற்று அவர் காட்டும் வழியில் போய் மோட்சம் அடைய வேண்டும் என்பது என் விருப்பம் அன்று.[2]
  • இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை ஆண்களே எதிர்க்கிறார்கள். அதனால் அந்தத் திட்டம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. மேலும், பழங்காலந் தொட்டு திருமணங்களில் வாழ்த்துகிறவர்கள் ஏராளமான குழந்தைகளைப் பெறும்படி வாழ்த்தி வருகிறார்கள். அந்தப் பழக்கம் இன்னமும் நீடிக்கிறது. மக்கள் செல்வம் தான் பெரிய செல்வம் என்ற எண்ணம் இன்னமும் நீடித்து வருகிறது. குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றி பெறாததற்கு அதுவும் ஒரு காரணம்.[3]
  • இந்தியா விடுதலை பெற்ற பிறகு நம் கல்விமுறையை அடியோடு மாற்றாமல் போனது நாம் செய்த மிகப் பெரிய தவறுகளில் ஒன்று. கல்விப் பயிற்சி என்பது வகுப்பு அறையில் பெறும் பயிற்சியுடன் நின்று விடாது. வாழ் நாட்கள் பூராவும் கல்வி கற்க வேண்டும். நூல்களிலிருந்து மத்திரமின்றி நம்மைச் சுற்றிலும் வெளி நாடுகளிலும் நடக்கும் சம்பவங்களிலிருந்தும் விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.— (5-1-1973)[3]
  • நான் முழுமையாக நேருஜியைப் பின்பற்றுவதாகவோ, காந்திஜியைப் பின்பற்றுவதாகவோ, சொல்லவில்லை இப்போது காலம் மாறிவிட்டது. மக்களின் அபிலாஷைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிருக்கிறது. ஆனல் இந்த நாடு காந்திஜியின் லட்சியங்கள் கொள்கைகள் அடிப்படையில் தான் இயங்கும். அவற்றை நாம் மறந்து விடவில்லை. — (7-1-1975)[4]
  • இந்திய சமுதாயத்திற்கு ஒரு புதிய பாதையை வகுத்துக் கொடுக்கச் சிறந்த முயற்சி செய்தவர் என்று, நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சரித்திர நூல்கள் எழுத விரும்புவோர் என்னைப் பற்றிக் குறிப்பிட் வேண்டும் என்பதே என் ஆசை.— (4-9-1 973)[5]
  • அரசியலே மோசமானது என்று சில தத்துவ மேதைகள் கூறுகிறார்கள். அரசியல் மோசமானது அல்ல. அரசியலை மக்கள்தான் மோசமாக ஆக்குகிறார்கள். தனிப்பட்டவர்களின் கருத்துக்கள் தனிப்பட்டவர்களின் முன்னேற்றம் ஆகியவையே அரசியல் என்று நாம் ஆக்கிவிட்டோம். ஆனல் உண்மையில் அரசியல் என்பது மக்களின் பொருளாதார சமுதாய நிலையை உயர்த்துவதற்கான பெரியதொரு இயக்கமாகும்.— (16-9-1970)[6]
  • சுயேட்சை வேட்பாளர்கள் என்று கூறப்படுகிறவர்கள், அரசியல் கட்சிகளிலிருந்து மட்டுமல்லாமல், தங்கள் நாட்டிலிருந்தும், அதன் கொள்கைகளில் இருந்தும் ஒதுங்கி நிற்கின்றவர்கள். (8- 2 - 1969)[7]

குறிப்புகள்கள்

தொகு
  1. தி இந்து, பெண் இன்று ( இணைப்பு) 2016 நவம்பர் 15
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. 3.0 3.1 சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  4. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  5. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  6. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  7. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 101-110. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=இந்திரா_காந்தி&oldid=18587" இலிருந்து மீள்விக்கப்பட்டது