இந்தியப் பழமொழிகள்

(இந்திய பழமொழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தப் பக்கத்தில் இந்தியப் பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

  • அத்திப்பூவையும், வெள்ளைக் காகத்தையும், நீரிலுள்ள மீனின் காலையும் பார்த்தாலும் பார்க்கலாம், ஒரு பெண்ணின் மனத்திலுள்ளதைப் பார்க்கவே முடியாது.
  • அம்மான் வீடானாலும், ஏழு நாட்களுக்குத்தான் வசதியாயிருக்கும்.
  • அரைகுறை வைத்தியனால் உயிருக்கு ஆபத்து, அரைகுறை முல்லாவால் சமயத்திற்கே ஆபத்து.
    [முல்லா- முஸ்லிம்களின் குரு]
  • அன்புள்ள அந்நியனும் நமக்கு உறவு தான்.
  • அன்னை அவன் வயிற்றைப் பார்ப்பாள், மனைவி முதுகைப் பார்ப்பாள்.
  • ஆடவர்களே இல்லாவிட்டால், பெண்கள் அனைவரும் கற்புடையவர்களே.
  • ஆந்தைக்குத்தான் தெரியும் ஆந்தையின் அருமை.
  • இருண்ட வீட்டின் ஒளி-மகன். குழந்தையின் ஓட்டம் தாய்வரைக்கும்.
  • இல்லாள் இல்லாத வீட்டில் பேய்கள் குடியிருக்கும்.
  • இளந் தளிர்களும் உதிர்ந்த சருகுகளும் எங்குமே காணப் பெறுகின்றன.
  • இளம் காதலர்கள் விரும்புகிறார்கள், விவாகமான மனிதர்கள் வருந்துகிறார்கள்.
  • இனிப்பான மருந்துகளும், இன்பமான நோய்களும் உண்டா ?
  • இனிப்புக்குத் தேன், அன்புக்கு மனைவி
  • உறவுள்ள இடத்தில் பகையும் இருக்கும்.
  • உன் மகன் நல்லவனானால், நீ ஏன் சேமிக்க வேண்டும்? உன் மகன் தீயவனானால், (அவனுக்காக) நீ ஏன் சேமித்து வைக்க வேண்டும்?
  • உயரே ஏறிப் பார் : எல்லா வீடுகளும் ஒரே மாதிரியாகவே தோன்றுகின்றன.
  • எப்பொழுதும் நோயுள்ளவனுக்குப் பெயர் ஆரோக்கியசாமி.
  • ஏழு திரைகளைத் தாண்டியும் வேலைக்காரியின் குறையைக் கண்டு விடுவாய்; யசமானி அம்மாளின் குறை ஒரே திரையில் மறைந்து விடும்.
  • ஒத்த மனமுடையவர்கள் சேர்ந்தால், கடலையும் வற்ற வைக்கலாம்.
  • ஒரு மனிதன் பெண்ணின் பின்னால் ஓடினால் திருமணம்; ஒரு பெண் மனிதன் பின்னால் ஓடினால் அவளுக்கு அழிவு.
  • ஒற்றடம் போடுதல் பாதி வைத்தியம்.
  • கழுதையும் இளமையிலே அழகுதான்.
  • காதல், கஸ்தூரி, இருமல் மூன்றையும் அடக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.
  • காதல் சாதி வேற்றுமைகளைக் கண்டு சிரிக்கின்றது.
  • காமம், நெருப்பு, இருமல் இம்மூன்றும் மறைக்க முடியாதவை.
  • குருடனை விருந்துக்கு அழைத்தால், இரண்டு விருந்தினர்கள் வருவார்கள்.
  • குழந்தைகள் இல்லாத வீடு சுடுகாடு.
  • குழந்தைக்குச் சோறு கொடுத்தால், தாய்ப்பாலை மறக்கும்; பெண்ணுக்கு கணவன் வந்தால், தாயை மறப்பன்.
  • குழவிப் பருவத்தில் அழுகை அதிகம், வயது காலத்தில் பேச்சு அதிகம்.
  • கோழிக்கு ஊசிப்புண் போதும்.
  • கைம்பெண் வளர்த்த பிள்ளை மூக்குச் சரடு இல்லாத காளை.
  • சகோதரனைப் போன்ற நண்பனில்லை, சகோதரனைப் போன்ற பகைவனுமில்லை.
  • சாவைத் தடுக்க மருந்தில்லை.
  • சில சமயம் மூழ்குதல், சில சமயம் மேலெழுதல்: இது தான் வாழ்க்கை.
  • செல்வமுள்ள போது தந்தை, வறுமையிலே தாய்.
  • குதிரைகளும் மனிதர்களும் தாய்வழியைக் கொள்வார்கள்.
  • தாய்க்கு உதவி செய்யாதவன் வேறு யாருக்கு உதவி செய்வான்?
  • நான்கு கண்கள் சந்தித்ததும், இதயத்தில் காதல் தோன்றிற்று.
  • நிலம் மழையில்லாமல் அழும், விதவை கணவனில்லாமல் அழுவாள்
  • பசு உள்ள இடத்தில் கன்றும் இருக்கும்.
  • பட்டினி யிருத்தல் பரம ஔடதம்.
  • பதினாறு வயது வரை மகன், அதற்கு மேல் தோழன்.
  • பழைய வீட்டைச் சீர்ப்படுத்து, பழைய மனைவியைப் போற்று.
  • பாம்பைவிடப் பிராமணனை நம்பு, வேசியைவிடப் பாம்பை நம்பு, பட்டாணியைவிட வேசியை நம்பு.
    [பட்டாணி- கடன் கொடுத்து வாங்கும் ஆப்கானியர் வகுப்பைச் சேர்ந்தவன்.]
  • பூண்டு தின்ற பின்னும் நோய் தீரவில்லை.
    [உள்ளிப்பூடு அவ்வளவு விசேஷமாகக் கருதப்படுகின்றது.]
  • பெண்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளச் சயித்தான் கூடப் பிரார்த்தனை செய்கிறான்.
  • பெண்ணின் பேச்சிலே தேன் இருக்கிறது, உள்ளத்திலே நஞ்சைத் தவிர வேறில்லை.
  • பெண்ணே, உன்னிடம் மூன்று நல்ல குணங்களும், நாலு லட்சம் தீய குணங்களும் இருக்கின்றன. நல்லகுணங்கள்: இசை பாடுதல், (இறந்த கணவனுடன்) சதியாக எரிதல், பிள்ளைகள் பெறுதல்.
  • மனிதனுக்குப் போர் எப்படியோ , அப்படிப் பெண்ணுக்குப் பிரசவம்.
  • மனிதன் தானே தனக்குச் சயித்தான்.
  • முடவன் ஒவ்வோர் அடியிலும் தடுக்கி விழுவான்.
  • முதல் சாமத்தில் எல்லோரும் விழித்திருப்பர், இரண்டாவதில் போகி விழித்திருப்பான். மூன்றாவதில் திருடன் விழித்திருப்பான், நான் காவதில் நோயாளி விழித்திருப்பான்.
  • மூன்று பெண்களுக்கு அப்பால் பிறந்த பையன் பிச்சை யெடுப்பான்; மூன்று பையன்களுக்கு அப்பால் பிறந்த பெண் இராஜ்யத்தை ஆள்வாள்.
  • விடத்திற்கு மருந்து விடம்தான்.
  • வீட்டிலே மருந்து இருக்கிறது, ஆனாலும் நாம் மரிக்க வேண்டியவர்களே.
  • வீட்டுக் குப்பையை வீட்டிலேயே அள.
  • வைத்தியரின் மரங்களுக்கு நம் கண்ணீர்தான் தண்ணீர்.
  • வைத்தியருக்கு மூக்கிலே படர்தாமரை.
  • வௌவால் தன் விருந்தாளியிடம், 'நான் தொங்குகிறேன், நீயும் தொங்கு!' என்று சொல்லும்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இந்தியப்_பழமொழிகள்&oldid=38022" இலிருந்து மீள்விக்கப்பட்டது