இத்தாலி பழமொழிகள்
இப்பக்கத்தில் இத்தாலி பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.
- அன்பில்லாத கணவன் பொறாமையுள்ள கணவனைவிட மேலானவன்.
- ஆறடி நிலம் அனைவரையும் சமானமாக்குகின்றது.
- இறந்த மனைவியின் துக்கம் வாயிற் கதவோடு சரி.
- இறந்தவன் ஒருவனைத் தூக்க நாலு பேர் வேண்டும்.
- இன்று விருந்து, நாளை உபவாசம்.
- ஈக்கும் இருமலுண்டு.
- ஒரு தொழிலும் தெரியாதவன் வைத்தியனாகிறான்.
- ஒரு மகள் வேண்டுமென்று தேர்ந்தெடுப்பதுபோல், மனைவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு, அவன் ஒரு வீடாவது கட்டியிருக்க வேண்டும், ஒரு மகனையாவது பெற்றிருக்க வேண்டும், அல்லது ஒரு நூலாவது எழுதியிருக்கவேண்டும்.
- ஒரே பெண்ணையோ, ஒரே பேருந்தையோ தொடர்ந்து ஓட வேண்டாம், பின்னால் வேறு கிடைக்கும்.
- ஒவ்வொரு ஜாடிக்கும் ஒரு மூடி கிடைக்கும். (திருமணம்.)
- காதல் கொண்டவர்களின் கோபம் சிலந்தி வலை போன்றது.
- குஞ்சுகளே வாத்துக்களைப் புல்வெளிக்கு அழைத்துச் செல்கின்றன.
- குழந்தைகள் இல்லாதவனுக்கு அன்பு புரியாது.
- சூரியன் போகாத இடத்திற்கு வைத்தியர் போகிறார்.
- சூரியனையே பார்க்க முடியாதவன் குருடன்தான்.
- செல்வமில்லாமல் ஆரோக்கியம் மட்டும் இருந்தால் அதுவே பாதி நோயாகும்.
- தூங்கும் பொழுது சிரிக்கும் குழந்தை தேவர்களுடன் விளையாடுகின்றது.
- நமக்குக் காசு நிறைய இருந்தால், அத்தை பிள்ளைகளும், அம்மான் பிள்ளைகளும் கிடைப்பார்கள்.
- நல்ல மரணம் வாழ்வு முழுவதும் பெருமையளிப்பது.
- நல்லதோ, கெட்டதோ நாம் அனைவரும் வாழத்தான் வேண்டும்.
- நீ கடலுடன் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் ஓர் ஆறு.
- நோயாளி எதுவும் பேசலாம்.
- மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு; ஆனால் நீ தனித்திரு.
- மரணம் ஆண்டிக்கும் உண்டு, போப்பாண்டவருக்கும் உண்டு.
- வீட்டுக்குத் தேவையானவை நான்கு: தானியம், சேவல், பூனை, மனைவி.
- வெந்நீரும், 'எனிமா'வும் கொண்டே எல்லாப் பிணிகளையும் குணமாக்கலாம்.
[குடலில் நீரேற்றும் குழாய் 'எனிமா.'] - வைத்தியரிடத்திலும் வக்கீலிடத்திலும் உண்மையை மறைக்காதே.