இதயம்

மனிதர், விலங்கு போன்ற்றற்றின் குருதியை உடல் முழுவதும் பாய்ச்சும் உறுப்பு

இதயம் அல்லது இருதயம் அல்லது உயிர்முதல் (அதாவது உயிர் வாழ்வதற்கான முதலான ஒன்று அல்லது முதன்மையான ஒன்று) (மாற்றுச்சொற்கள்: நெஞ்சு, நெஞ்சாங்குலை ) என்பது குருதிச் சுற்றோட்டத்தொகுதி கொண்டுள்ள எல்லா உயிரினங்களிலும் காணப்படும் ஒரு நாரியத் தசையாலான ஓர் உறுப்பாகும். இதயமானது நீண்ட காலமாக அன்பின் அடையாளமாக பயன்படுத்தப்படுகின்றது.

மேற்கோள்கள் தொகு

  • நல்ல மனிதனின் இதயம் இந்த உலகில் ஆண்டவனுடைய ஆலயம். -திருமதி நெகார்[1]
  • இதயத்தைக் கவர்ந்துகொண்டால், எது சொன்னாலும் புரிய வைக்கலாம். - ஸி. ஸிம்மன்ஸ்[1]
  • ஆண்களும் பெண்களும் அறிவைக்காட்டிலும் இதயங்களாலேயே இழுத்துச் செல்லப்பெறுகின்றனர். இதயத்திற்கு வழி, புலன்கள் கண்களையும் காதுகளையும் திருப்தி செய்தாலும் காரியம் பாதி கைகூடிவிடும். - செஸ்டர்ஃபீல்டு[1]
  • மனம் மனிதனின் ஒரு பகுதிதான் இதயமே அனைத்தும் எனலாம். - ரிவரோல்[1]
  • ஒவ்வோர் இதயமும் ஒர் உலகம். நீ வெளியே பார்க்கிற அனைத்தையும் உன்னுள்ளேயும் காண்கிறாய். உன்னை நீ தெரிந்துகொள்ள, உன்னை இதுவரை நேசித்தவர்களையும் துவேஷித்தவர்களையும் உண்மையான முறையில் குறித்துப் பார். - லவேட்டர்[1]
  • இதயத்தின் காரணங்களைப் பகுத்தறிவால் புரிந்துகொள்ள முடிவதில்லை. - பாஸூட்[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 101. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இதயம்&oldid=20025" இலிருந்து மீள்விக்கப்பட்டது