இங்கிலாந்து பழமொழிகள்
இதில் இங்கிலாந்து நாட்டில் வழங்கப்படும் பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
- அத்தையோடு நீ உண்ணலாம், ஆனால் தினமும் போய் உட்காரக் கூடாது.
- அரசர், கெய்ஸர், பிரபு, சட்டங்கள் ஆகிய அனைத்திற்கும் மேற்போனது காதல்.
- அவசரக் காதல் சீக்கிரம் சூடாகி, சீக்கிரம் குளிந்து விடும்.
- அவசியமான பொருள்கள் நிறைந்த ஒரு வீடு, நன்றாக உழுத ஒரு சிறு நிலம், நல்ல சிந்தனையுள்ள சிறு - மனைவி மூன்றுமே இன்ப வாழ்வளிக்கும்.
- அழகான பெண்ணும், நீண்ட கிழிசலுள்ள அங்கியும் எந்த ஆணியிலும் மாட்டிக் கொள்ளும்.
- அழகிய மனைவியை உடையவனுக்கு இரண்டு கண்களுக்கு மேல் தேவை.
- அறிவாளி எவனும் இளமையை விரும்ப மாட்டான்.
- அறைகள் காலியாயிருந்தால், மனைவியர்க்குத் தலைகிறு கிறுக்கும்.
- ஆலோசனைக்கு முதியோர், போருக்கு இளைஞர்.
- இதயம் எங்கு தங்கியுளதோ அதுவே வீடு
- இரண்டு தொட்டில்களை ஆட்டுவதைவிட, ஒரு கலப்பையால் உழுவது மேல்.
- இரவில் ஓர் ஆப்பிளை உண்டு வந்தால், பல் வைத்தியருக்கு நம்மிடம் வேலையில்லை.
- இறக்கும் வரை நாம் வாழத்தான் செய்வோம்.
- இறந்தவனுக்குக் குளிரில்லை.
- இறைவன் (படைத்த) ஆட்டுக் குட்டிகள் துள்ளி விளையாடும்.
- இளமையான தோள்களில் முதுமையான தலைகளை வைக்க முடியாது.
- இளமையில் ரோஜா மலர்களின் மீது படுத்திருந்தால், முதுமையில் நீ முட்களின்மீது படுத்திருப்பாய்.
- இளமையைத்தான் அடக்கிக கொண்டு வரவேண்டும், முதுமை தானே தன்னை அடக்கிக் கொள்ளும்.
- இளைய சகோதரனுக்குப் புத்தி அதிகம்.
- உணவு, அமைதி, முகமலர்ச்சி ஆகிய மூவருமே உலகில் தலைசிறந்த மருத்துவர்கள்.
- உயர்ந்த கட்டடங்களுக்கு ஆழமான அடிப்படை இருக்கும்.
- உறவினரைக் கடவுளே கொடுத்து விடுகிறார், நண்பர்களை மட்டும் நாமே தேர்ந்து கொள்ளலாம்.
- உன் பாட்டனாருக்கும் ஓர் அத்திப்பழம் கொடுத்து ஆதரித்து வா.
- எல்லா இடங்களிலும் கண்களின் பாஷை ஒன்று தான்.
- எல்லா மனிதரும் சீரஞ்சீவிகளா யிருக்கவே விரும்புகின்றனர்.
- எவ்வளவு காலம் நாம் வாழ்ந்தோம் என்பது முக்கியமில்லை, எவ்வளவு நேர்மையாக வாழ்ந்தோம் என்பதே முக்கியம்.
- ஒடுக்கமான வீட்டில் விகாரமான மனைவியை உடையவனுக்குக் கவலையே யில்லை.
- ஒரு குழந்தையுடன் நீ நடக்கலாம்; இரு குழந்தைகளுடன் சவாரி செய்யலாம்; மூன்றாகிவிட்டால் , நீ வீட்டோடு இருக்க வேண்டியது தான்.
- ஒரு தந்தை நூறு ஆசிரியர்களுக்கு மேலாவார்.
- ஒரு பெண்ணையும் காதலிக்காதவன் பன்றியிடம் பால் குடித்திருப்பான்.
- ஒரு முறை இழந்த கற்பை ஒட்ட வைக்க முடியாது.
- ஒவ்வொரு பிச்சைக்காரனும் எவனோ ஓர் அரசனின் வழி வந்தவன், ஒவ்வோர் அரசனும் ஒரு பிச்சைக்காரனின் வழிவந்தவன்.
- ஒன்று சேர்ந்தால், நாம் வாழ்வோம்; பிரிந்தால், வீழ்ந்து விடுவோம்.
- கட்டடம் கட்டுதல் இனிமையாக எளிமையடையும் வழி.
- கட்டிய வீடு கிடைக்கும், ஆனால் மனைவியை நாம்தான் கட்டிக் கொள்ள வேண்டும்.
- கடவுள் நமக்கு உறவினரைக் கொடுத்திருக்கிறார்; ஆனால் அன்பர்களை மட்டும் நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
- கணவர்கள் அடங்கிப் போவதால்தான், மனைவியர் வெறி அதிகமாகின்றது.
- கணவர்கள் வானுலகம் சென்ற பிறகே மனைவியின் ஏச்சு நிற்கும்.
- கணவனுக்கு வேண்டியது அறிவு, மனைவிக்கு வேண்டியது அடக்கம்.
- கணவன் கரண்டியால் சேகரித்து வருவதை, நீ மண் வெட்டியால் வெளியே வாரி வாரி இறைக்க வேண்டாம்.
- கலியாணத்திற்குப் பெண் தேடி நெடுந்தூரம் செல்பவன் யாரையோ ஏமாற்றப் போகிறான். அல்லது தான் ஏமாறுவான்.
- கல்லும் வயிரமும் குருடனுக்கு ஒன்றுதான்.
- காதல்தான் காதலுக்குப் பரிசு
- காதலின் இனிமைகளில் கண்ணீர் கலந்திருக்கும்
- காதலுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை.
- காதலுக்காக உயிரை விடுபவர்கள் அளவுக்கு அதிகமாகக் காதலிப்பவர்கள்.
- காதலைப்போல, வயதையும் மறைக்க முடியாது.
- காலந்தோறும் நோயும் மாறுகின்றது.
- குணப்படுத்துவது கடவுள், சம்மானம் பெறுவது வைத்தியர்.
- குலப் பெருமை பேசுபவன் உருளைக் கிழங்கு போன்றவன்; கிழங்கைப் போலவே, அவன் பெருமையும் மண்ணுக்குள் மறைந்திருக்கும்.
- குளிர்ச்சியான தலையும், சூடான பாதங்களும் நீண்ட வாழ்வுக்கு உகந்தவை.
- குழந்தைகளுக்குச் செவிகள் அகலமானவை, நாவுகள் நீளமானவை.
- குழந்தைகளும் கோழிக் குஞ்சுகளும் எப்பொழுதும் தின்று கொண்டே யிருக்கவேண்டும்.
- குழந்தைகளே ஏழைகளின் செல்வங்கள்.
- குழந்தைகள் இளமையில் தாயிடம் பால் குடிக்கின்றன, முதுமையில் தந்தையிடம் (அறிவுப்) பால் குடிக்கின்றன.
- குழந்தை பேசுவதெல்லாம் அடுப்பங்கரையில் கற்றவை.
- குழந்தை யில்லாதவனுக்கு அன்பு என்ன என்று தெரியாது.
- குழந்தையைக் கொண்டாடினால், தாயின் அன்பைப் பெறலாம்.
- குழந்தையைப் பெற்றவளெல்லாம் தாயாகிவிட மாட்டாள்.
- குழந்தைக்கு முதற்பாடம் பணிவு.
- கூனனுக்குத் தன் கூனல் தெரியாது, பக்கத்திலிருப்பவன் கூனலையே பார்ப்பான்.
- சத்திரத்தின் பக்கத்திலும், முக்குமுனையிலும் உள்ள வீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.
- சிறு குடும்பத்திற்கு வேண்டியவை விரைவிலேயே கிடைக்கும்.
- செவிட்டுக் கணவன், குருட்டு மனைவி-இந்தத் தம்பதிகள் இன்பமா யிருப்பார்கள்.
- சிரிக்கும் மிருகம் மனிதன் ஒருவன் தான்.
- செத்த மீன்கள் வெள்ளத்தோடு போய்விடும்.
- தடுமனுக்கு உணவு, காய்ச்சலுக்கு பட்டினி.
- தந்தை அழுவதைவிட, குழந்தை அழுவது மேல்.
- தந்தை தோட்டத்திற்குப் போனால், மகன் உழுவதற்குப் போவான்.
- தனக்குத் தானே வைத்தியம் செய்து கொள்பவனுடைய நோயாளி மூடன்.
- தாகத்தோடு படுக்கச் செல்பவன் உடல் நலத்தோடு விழித்தெழுவான்.
- தனியே நிற்கும் ஆடு ஓநாயிடம் சிக்கக்கூடும்.
- தாய் எப்படி வளர்க்கிறாளோ, அப்படி உருவாகிறார்கள் மனிதர்கள்.
- தாயாரின் செல்லப் பிள்ளைகள் வெண்ணை வெட்டும் வீரர்களாகவே வருவார்கள்.
- தாயில்லாத வீடு வீடாகுமா?
- திகைத்து நிற்பவனை விட நொண்டி விரைவாக வந்து விடுவான்.
- திடீர் மரணம் திடீர் இன்பம்.
- தீப்பட்ட குழந்தை நெருப்புக்கு அஞ்சும்.
- தீமையைப் பார்ப்பதைவிட, குருடாயிருப்பது மேல்.
- துருக்கியரைப் பற்றியும், போப்பாண்டவரைப் பற்றியும் பேச்சு வருகிறது; ஆனால் எனக்குத் தொந்தரவு கொடுப்பவன் என் அண்டை வீட்டுக்காரன்.
- தெய்வப் படைப்பில் மனிதனே தலைசிறந்தவன்.
- தேவை வருமுன்பே வைத்தியருக்கு மரியாதை செய்ய வேண்டும்.
- நண்பர்கள் இல்லாமல் நாம் வாழலாம், அண்டை அயலார் இல்லாமல் வாழ முடியாது.
- நல்ல கணவனானால், மனைவியும் நல்லவளாயிருப்பாள்.
நல்ல மனைவியால் கணவனும் நல்லவனாவான்.
- நல்ல மனைவியும் உடல் நலமும் மனிதனின் சிறந்த செல்வம்.
- நாம் அழுதுகொண்டே பிறக்கிறோம், குறை சொல்லிக் கொண்டே வாழ்கிறோம், ஏமாற்றமடைந்து இறக்கிறோம்.
- நாவை அடக்கப் பழக்கிய குழந்தை விரைவிலே பேசக் - கற்றுக் கொள்ளும்.
- (நாள் பார்த்துவர) மரணத்திடம் பஞ்சாங்கம் கிடையாது.
- நான் என் தொப்பியை மாட்டும் இடமே என் வீடு.
- நான் பிறக்கும்பொழுதே அழுதேன் ; ஏன் அழுதேன் என்பதை ஒவ்வொரு நாளும் உணர்கிறேன்.
- நீண்ட நாள் வாழ்வதற்குக் கதகதப்பான உடையணியவும் மிதமாக உண்ணவும், நிறைய நீர் பருகவும்.
- நீண்ட வாழ்வு நெடுந் துயரங்களுள்ளது.
- நோயாளியின் அறை பிரார்த்தனைக் கூடம்.
- நோயின் தந்தை எவனாயிருந்தாலும், தாய் உணவுக் கோளாறுதான்.
- (நோய்) வரும்போதுநோய் குதிரைமேல் வரும், நீங்கும்போது நடந்து செல்லும்.
- பத்து வயதில் பெண் தேவகன்னியா யிருப்பாள், பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போலிருப்பாள், நாற்பதில் சயித்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள்.
- பலமில்லாதவையும் ஒன்று சேர்ந்தால், பலமுண்டாகிவிடும்.
- பலர், தாம் சிக்கனமில்லாமல் வாழ்ந்து விட்டு, மனைவியைக் குறை சொல்லுவர்.
- பிச்சைக்காரனாக வாழ்வதைவிட, பிச்சைக்காரனாக மடிவது மேல்.
- பிணியே வராதவன் முதல் வகுப்பிலேயே இறந்து போவான்.
- பிறக்கும் பொழுதுதான் நாம் அழுகிறோம், மரிக்கும்பொழுதன்று.
- பிறப்பது போலவே, இறப்பதும் இயற்கை.
- புதிதாகக் கலியாணமானவனே தன் மனேவியிடம் செய்திகள் கூறுவான்.
- புருடன் இறந்ததும், அண்டைவீட்டுக்காரர்கள் அவனுக்கு எத்தனை குழந்தைகள் என்பதை அறிகிறார்கள்.
- பெண்களுக்கும், குருமார்களுக்கும், கோழிகளுக்கும் எவ்வளவு இருந்தாலும் போதாது.
- பெண்ணின் முன்பாகத்திற்கும் கழுதையின் பின்பாகத்திற்கும், பாதிரியாரின் எல்லாப் பாகங்களுக்கும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.
- மதிய உணவுக்குப் பின் சிறிது நேரம் அமர்ந்திரு, இரவு உணவுக்குப்பின் ஒரு மைல் நட.
- மரணத்தற்கு அஞ்சுபவன் வாழ்பவனாகான்.
- மரணத்தைவிட அஞ்சத்தக்கது முதுமை.
- மற்றவர்களுடைய பெண்களிடத்திலும், பணத்தினிடத்திலும் விளையாட வேண்டாம்.
- மனிதன் பிறந்தவுடன் மரிக்கத் தொடங்குகிறான்.
- மனிதனுக்குத் தன் வீடுதான் மாளிகை.
- மனிதனுக்கு முதன்மையான பகைவன் மனிதனே.
- மனிதனையும் விலங்கையும் அடக்கி விடுபவை வயதும், விவாகமும்.
- மனிதன் இயற்கையில் ஓர் அற்புதம்.
- மனைவியர் இளைஞருக்கு நாயகிகள், முதியோருக்குத் தாதிகள்.
- மனையாளின் குற்றங்களுக்கு மணவாளனே பொறுப்பு; குரங்கு வளர்ப்பவன் அதன் சேட்டைகளுக்குப் பொறுப்பாளி.
- மிகவும் சாந்தமான கணவர்களுக்கும் புயல் போல் சீறும் மனேவியர் அமைகின்றனர்.
- முத்தங்கள் திறவுகோல்கள்.
- முதுமையே ஒரு நோய்.
- முதுமையில் இளமையை விரும்புவோர் இளமையில் முதியவராயிருக்க வேண்டும்.
- முதுமையில் யோசிக்கவேண்டும், இளமையில் செயல் புரிய வேண்டும்.
- முற்றும் கனிந்த கனி முதலில் விழும்.
- முறையில்லாத வாடகைக்காரனைவிட, காலி வீடே மேலானது.
- முன்னிரவில் தூங்கி, அதிகாலையில் எழுந்திருப்பவனுக்கு உடல் நலமும், செல்வமும் அறிவும் பெருகும்.
- வயது ஆக ஆக அறிவும் பெருகும், மடமையும் பெருகும்.
- வயது கூடக் கூட, கல்லறை நெருங்கி வருகிறது.
- வயது முதிர்ந்த மனிதன் எலும்புகள் நிறைந்த மெத்தை போன்றவன்.
- வயோதிகம் நோய்கள் சேரும் துறைமுகம்.
- வயோதிகர் குளிர்காய்ந்து கொண்டிருக்கையில், வாலிபர்கள் நடனமாடுவார்கள்.
- வாலிப நாவிதன், வாலிப வைத்தியன் இருவரிடமும் எச்சரிக்கையா யிருக்கவேண்டும்.
- வாலிபம் நம்பிக்கைக்குரிய பருவம்.
- வாலிபத்தில் கவனமின்றித் துள்ளினால், வயது காலத்தில் வருந்தவேண்டும்.
- வாலிபத்திலும் வெள்ளைத் தாளிலும் எதை எழுதினாலும் பதிந்து விடும்.
- வாழ்க்கை ஒரு தறி, அதில் மாயை (என்ற துணி) நெய்யப்படுகின்றது.
- வாழ்க்கை வாழ்வதிவதில்லை, நம் விருப்பத்திலிருக்கிறது.
- வாழ்வில் (நன்கு) வாழாதவன் மரணத்திற்குப் பின்னும் வாழமாட்டான்.
- வாழ்வும் துயரமும் ஒன்றாகத் தோன்றியவை.
- விகாரமான ஸ்திரீ வயிற்றுவலி, அழகுள்ளவள் தலைவலி.
- வீட்டில் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதே எல்லா ஆசைகளின் முடிவான நோக்கம்.
- விதவை துக்கம் காக்கும் பொழுதே, விவாகம் செய்து கொள்.
- விதவைகள் எப்போதும் பணக்காரிகள்.
- விதவையை மணப்பவன் விரைவிலே முடிக்க வேண்டும்.
- விருந்தினால் வைத்தியர்களுக்கு வேட்டை.
விருந்து நடத்தினால் நண்பர்கள் கிடைத்து விட மாட்டார்கள்.
- வீட்டைப் பார்க்கிலும் கதவு பெரிதா யிருக்கக் கூடாது.
வீட்டைப் பார்த்தே உடையவனை அறிந்து கொள்ளலாம்.
- வெளியே கிடைக்கும் வெந்த இறைச்சியைக் காட்டினும், வீட்டிலே யிருக்கும் உலர்ந்த ரொட்டி மேல்.
- வைத்தியர்கள் கலந்து ஆலோசிப்பதற்குள், நோயாளி இறந்து விடுகிறான்.
- வைத்தியர்களில் வயதானவர், வக்கீல்களில் வாலிபர்.
- வைத்தியர்களைவிட உணவுமுறை அதிகக் குணமுண்டாக்கும்.
- வைத்தியர் குணமாக்கினால் சூரியனுக்குத் தெரியும், வைத்தியர் கொன்று விட்டால், பூமிக்குத் தெரியும்.
- வைத்தியருக்கும் மரணம் உண்டு.