ஆஸ்கார் வைல்டு

ஆஸ்கார் வைல்டு (Oscar Wilde, 16 அக்டோபர் 1854 – 30 நவம்பர் 1900) ஒரு ஐரிய நாடகாசிரியரும், எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். இவர் எண்ணற்ற சிறுகதைகளையும் ஒரு புதினத்தையும் எழுதியுள்ளார். நகைத்திறம் வாய்ந்த எழுத்துக்களுக்காக மிகவும் அறியப்பட்ட இவர், விக்டோரியாக் காலத்தில் இலண்டனில் மிகவும் வெற்றிகரமான நாடகாசிரியராக விளங்கியதுடன், அக்காலத்துப் பிரபலங்களுள் ஒருவராகவும் விளங்கினார்.

ஆஸ்கார் வைல்டு

மேற்கோள்கள்

தொகு
  • தானாக இருந்து, தனக்கு உண்மையாய் நடந்து, தன்னிடம் பரிபூரண நம்பிக்கை கொண்டவனே உண்மையான கலைஞன்.
  • உலகம் எனக்குக் கெடுதல் செய்திருந்த போதிலும், நான் எனக்குச் செய்து கொண்ட கெடுதல் அதைவிடக் கொடியது. - (1895)[1]
  • என் காலத்தின் கலைக்கும் ஓர் வளர்ச்சிச் சின்னமாக நான் இருந்தேன். காளைப் பருவத்தில் இதை நான் உணர்ந்து, என் முதிய பருவத்திலும் இதை நன்றாய் அறியும்படி கட்டாயம் நிகழ்ந்தது. தன் வாழ்நாளில் உயர்ந்த நிலையில் என்னப்போல் வாழ்ந்து உண்மைகளை அறிந்தவர்கள் மிகச்சிலரே இருக்கக்கூடும்.[2]
  • சாதாரண சிறையில், சாதாரண கைதியாக நான் அடைந்த நிலையைப் பற்றி நான் வெட்கப்பட வேண்டியதேயில்லே. இது எனக்கு ஏற்பட்ட தண்டனையே. தண்டனையைப் பற்றி வெட்கப்படுவதில் என்ன பொருள் இருக்கிறது? என்னுடைய வாழ்க்கையில், நான் செய்யாத குற்றத்திற்காகவும் தண்டித்திருக்கிறார்கள். செய்த குற்றத்திற்காகவும் தண்டித்துமிருக்கிறார்கள். அநேக சந்தர்ப்பங்களில், நான் செய்த குற்றங்களுக்குத் தண்டிக்கப்படாமலும் வந்திருக்கிறேன். [2]
  • நானே என்னைக் கெடுத்துக் கொண்டதாகத்தான் சொல்லவேண்டும். எந்த நிலையிலுள்ளவனும், பெரிய பதவியிலிருந்தாலும் சரி, சிறுபதவியிலிருந்தாலும் சரி, தன் செய்கையினலேதான் கெட்ட நிலையை அடைய முடியும். இந்த உண்மையைச் சொல்ல நான் தயாராக இருக்கிறேன். மற்றவர்கள் எப்படி நினைத்தாலும் சரி, நான் சொல்லுவதும் உண்மையே. இந்த நிமிடத்தில் மற்றவர்கள் இதை ஒப்புக் கொள்ளாமலிருக்கலாம். நான் இரக்கமற்று இந்தக் குற்றத்தை என் தலையிலே சுமத்திக் கொள்ளுகிறேன். உலகம் எனக்குக் கெடுதல் செய்திருந்த போதிலும், நான் எனக்கு செய்து கொண்ட கெடுதல் அதைவிடக் கொடிது.[3]

சான்றுகள்

தொகு
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. 2.0 2.1 சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.

வெளியிணைப்புக்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆஸ்கார்_வைல்டு&oldid=37266" இலிருந்து மீள்விக்கப்பட்டது