ஆழ்ந்த சிந்தனை

ஆழ்ந்த சிந்தனை (contemplation) குறித்த மேற்கோள்கள்

  • உணவுக்குச் சீரண சக்தி எப்படியோ அப்படி, அறிவுக்கு ஆழ்ந்த சிந்தனை. ஒன்றன் பயனைப் பூரணமாக அநுபவிப்பதற்கு மற்றது உதவுகின்ற்து. - டி. எட்வர்ட்ஸ்[1]
  • ஆழ்ந்து சிந்திப்பதில் இனிய மகிழ்ச்சி ஏற்படுகின்றது. ஒரு மனிதன் நேர்மைக்கு மாறுபாடாகச் செருக்குடன் வாழ்ந்த பிறகு அவன் சிந்திக்க முடியாவிட்டால், தான் என்ன செய்ய வேண்டும் என்பதையே அறிய முடியாமலிருப்பான். - பிலெளன்ட்[1]
  • ஆழ்ந்த சிந்தனையை நாம் செயலுடன் ஐக்கியப்படுத்த வேண்டும். இரண்டும் சேர்வதில் நற்குணம் பூர்த்தியாக அமைகின்றது. அவை ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல, ஒன்றுக்கொன்று உதவியானவை. சிந்தனை செயலுக்குரிய வலிமையை அளிக்கும். செயல் மீண்டும் ஆழ்ந்து Aந்திக்கும்படி செய்யும். இவ்வாறு அகவாழ்வும் புறவிாழ்வும் ஒன்று சேர்ந்து வளர்ச்சியடையும். -ஃபூட்[1]
  • உள்ளத்தைப் பயன்படுத்திக்கொள்வதற்கு நாம் கற்பதைக் குறைத்துக்கொண்டு ஆழ்ந்து சிந்திப்பதை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். - டெஸ்கார்டிஸ்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 92. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆழ்ந்த_சிந்தனை&oldid=19915" இலிருந்து மீள்விக்கப்பட்டது