ஆலந்து பழமொழிகள்
இப்பக்கத்தில் ஆலந்து பழமொழிகள்* தொகுக்கப்பட்டுள்ளன.
- உருளைக் கிழங்கையும், காதலனையுமே ஒரு பெண் தானாகத் தேர்ந்தெடுக்கிறாள்.
- ஒரு முறை விவாகம் கடமை; இருமுறை தவறு; மும்முறை பைத்தியம்.
- காதற் கடிதங்களை எழுதுவோர் மெலிகின்றனர், கொண்டு கொடுப்பவர்கள் கொழுக்கிறார்கள். [காதலரின் தூதர்களுக்கு இருபக்கங்களிலும் வெகுமதிகள் நிறையக் கிடைக்கும்.]
- பெண்களைப் பெற்றவன் எப்பொழுதுமே மேய்க்க வேண்டிய ஆயன்.
- மற்றொருவர் மாளிகையில் விருந்து நன்றாகத்தான் இருக்கும்.
- மனிதனைப் போல நடந்து கொள்பவனே மனிதன்.
- வயிரம் போன்ற மகள் மனைவியாகும் போது கண்ணாடியாக மாறுகிறாள்.
- வீட்டை விட்டு வெகு தூரத்திலிருப்பவன் அபாயத்திற்கு அருகிலிருக்கிறான்.