ஆர்மீனியா பழமொழிகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இப்பக்கத்தில் ஆர்மீனியா பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

  • உலகம் என்ற சாணையில் மனிதன் ஒரு கத்தி.
  • உலகம் என்ற பானையில் மனிதன் ஒரு கரண்டி.
  • உனக்கு ஓர் இரகசியம் தெரியவேண்டுமா? ஒரு குழந்தை, பயித்தியக்காரன், குடிகாரன், அல்லது ஒரு பெண்ணிடம் கேட்டுப் பார்.
  • ஒரு நல்ல பெண் ஏழு பிள்ளைகளுக்கு மேல்.
  • மகள் இருந்தால், தாய்க்குச் செலவு இருந்து கொண்டே யிருக்கும்.
  • மனைவியைத் தேர்ந்தெடுக்கும்பொழுது கிழவனின் பார்வை வேண்டும்; குதிரையைத் தேர்ந்தெடுக்கையில் இளைஞனின் பார்வை வேண்டும்.
  • வெளியே விளக்கு வேண்டும், வீட்டிலே அனல் வேண்டும்.
    (விளக்கு-வழி காண்பதற்காக; அனல்-குளிர் காய்வதற்காக.)
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆர்மீனியா_பழமொழிகள்&oldid=37614" இலிருந்து மீள்விக்கப்பட்டது