ஆப்கானிஸ்தான் பழமொழிகள்
இப்பக்கத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டுப் பழமொழிகள் தொகுக்கப்படுள்ளன
- கூர்மையான முள் இளமையிலிருந்தே அப்படி யிருப்பது.
- நன்றியற்ற மகன் தந்தையின் முகத்திலுள்ள பரு; அதை அப்படியே விட்டிருந்தால் விகாரம், கிள்ளியெறிந்தால் வலி.
- தூக்கம் வந்து விட்டால், தலையணை தேவையில்லை; காதல் வந்து விட்டால், அழகு தேவையில்லை.
- விருந்துச் சாப்பாடு கடனாக அளிக்கப்படுவது.
[நாமும் திரும்ப விருந்தளிக்க வேண்டும்.] - வைசூரி விளையாடிய பிறகு தான், பெற்றோர்கள் குழந்தையைத் தங்கள் குழந்தையாகக் கணக்கிட வேண்டும்.