அவமரியாதை
அவமரியாதை அல்லது அவமதிப்பு (Insults) என்பது அவமானம், பழிப்புரை வசை, ஒரு பொருட்டாக கருதாமை போன்றதாக கருதப்படுகிறது. அவமதிப்பு சிலசமயம் வேண்டுமெற்றோ அல்லது தற்செயலானதாகவோகூட இருக்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- அவமரியாதையாக நடப்பதற்கு ஒருவனுக்கு எப்படி உரிமையில்லையோ, அதுபோலவே அவமரியாதையாய்ப் பேசவும் உரிமை கிடையாது; மற்றொருவனை அடித்துக் கீழே தள்ள ஒருவனுக்கு எப்படி உரிமையில்லையோ, அதுபோலவே முரட்டுத்தனமாய்ப் பேசவும் அவனுக்கு உரிமையில்லை. - ஜான்ஸன்[1]
- முன்னதாகத் திட்டமிட்டுச் செய்த அவமரியாதக்கு நஷ்டஈடு பெறவேண்டாம்; அதை மறந்துவிடு; அதை மன்னித்துவிடு. ஆனால், அப்படிச் செய்தவனிடமிருந்து வெகுதூரம் ஒதுங்கிவிடு. - லவேட்டர்[1]
- ஒருவன் சந்தர்ப்பம் அறியாமல் பேசுதலும், பேசிக்கொண்டிருக்கும் மற்றவர்களின் கவனத்தைத் தன்பால் இழுத்தலும், தன்னைப்பற்றியே பேசுதலும், தான் எவர்களுடன் இருக்கிறானோ அவர்களை மதியாமலிருத்தலும் அவனை அவமரியாதை என்ற குற்றமிழைத்தவனாகச் செய்யும். - ஸிஸெரோ[1]
- ஆணவம் என்ற குற்றச்சாட்டுக்கு இடம் கொடாமலிருக்க வேண்டுமானால், நாம் செய்கின்ற வேலையில் வெட்கப்படக் கூடாது. நாம் வெட்கப்பட வேண்டிய வேலை எதையும் ஒரு போதும் செய்யக்கூடாது. - ஸிஸெரோ[1]
- வெட்கத்தை உணர முடியாதவனும், அச்சத்தை அறியாதவனுமான ஒருவன் அவமரியாதையின் சிகரத்தை அடைந்தவனாவான் - மினாண்டர்[1]
- உலகை அறிந்தவன் வெட்கப்படமாட்டான் தன்னை அறிந்தவன் ஆணவமாயிருக்க மாட்டான். -ஸி. ஸிம்மன்ஸ்[1]
- அவமரியாதைக்கு உட்பட்டிருந்தால், மேலும் அதைச் செய்ய இடம்கொடுப்பதாகும். ஒருவன் (பிறரிடமிருந்து) எவ்வளவு மரியாதையைப் பெற முடியுமோ, அந்த அளவுக்குத்தான் அவனுக்கு மரியாதை கிடைக்கும். - ஹாஸ்லிட்[1]
- மனித சமூகத்தில் பெரும்பாலோர், அநீதியான செயல்களைக் காட்டிலும், அவமரியாதையான பேச்சையே அதிகமாக வெறுப்பர் அவர்கள் தீமையைத் தாங்குதல் எளிது. ஆனால், அவமரியாதையைத் தாங்குதல் அரிது. - புளுடார்க்[1]
- மதியாதார் தலைவாசல் மிதிக்கவேண்டாம். - உலகநீதி[1]
- பெருமை யுடையாரைப் பீடுஅழித்தல் இன்னா - இன்னா நாற்பது[1]
- பொறுப்பர்என்று எண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும். - நாலடியார்[1]