அவநம்பிக்கை

அவநம்பிக்கை (Distrust) என்பது ஒரு செயல் அல்லது ஒரு தரப்பினரை நம்பாத ஒரு உணர்வாகும்.

மேற்கோள்கள்

தொகு
  • வாழ்க்கை ஒரு போராட்டம். ஒருவன் நம்பிக்கையை எளிதில் இழந்துவிட்டால், அவன் இரண்டு கடமைகளிலிருந்து வழுவியவனாகிறான். மனிதனுக்குரிய தலைசிறந்த பண்பாகிய மனஉறுதியை அவன் இழக்கிறான். உலகிற்கு வழிகாட்டி ஆள்கின்ற பரம கருணாமூர்த்தியான இறைவனையும் மறுத்தவனாகிறான். - ஜென்போர்ட்டர் [1]
  • ஒரு தொழிவை அது நடக்காது என்று நம்புதல் அதை நடவாமற் செய்வதற்கு வழி. -கால்வியர்[1]
  • ஒரு காரியத்தை நாம் செய்யமுடியும் என்று உணர்வதே அதன் வெற்றியாகும். ஐயப்பட்டு அவநம்பிக்கை கொள்வதே தோல்விக்கு நிச்சயமான வழியாகும் [1]
  • எமக்குத் துணையாவார் வேண்டும் என்று எண்ணித்
    தமக்குத் துணையாவார்த் தாம்தெரிதல் வேண்டா:
    பிறர்க்குப் பிறர்செய்வது உண்டோமற்று இல்லை
    தமக்கு மருத்துவர் தாம். பழமொழி[1]
  • இனியாரும் இல்லாதார் எம்மின் பிறர்யார்?
    தனியேம்யாம் என்றுஒருவர் தாம்மயல் வேண்டா
    முனிவில ராகி முயல்க முனிவில்லர்
    முன்னியது எய்தாமை இல். - பழமொழி[1]
  • எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
    திண்ணியர் ஆகப் பெறின். - திருவள்ளுவர்[1]
  • கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
    தூக்கம் கடிந்து செயல். - திருவள்ளுவர்[1]
  • துன்பம் உறவரினும் செய்க. துணிவாற்றி
    இன்பம் பயக்கும் வினை. - திருவள்ளுவர்[1]
  • இசையாது எனினும், இயற்றியோர் ஆற்றல்
    அசையாது நிற்பதாம் ஆண்மை. - நாலடியார்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 56-57. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அவநம்பிக்கை&oldid=19477" இலிருந்து மீள்விக்கப்பட்டது