அரேபிய பழமொழிகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

அரபு மொழி பழமொழிகள் இந்தப் பக்கத்தில் தொகுக்கப்படுகின்றன.

 • அடுத்தவருக்கு அறிவுரை கூறுவதை விட முன்னுதாரணமாக இருந்து காட்டுவதே சிறந்தது.
 • அநாதைக் குழந்தைக்கு அழுவதற்குச் சொல்லிக் கொடுக்காதே
 • அல்லாவை நம்பு. ஆனால் ஒட்டகத்தைக் கட்டிப் போட மறக்காதீர்கள்.
 • ஆடவர்கள் இதயங்களால் சிரிப்பார்கள், பெண்கள் உதடுகளால் மட்டும் சிரிப்பார்கள்.
 • இரத்தம் எப்போதும் நீராக மாறாது.
 • இரு திருடர்களின் சண்டையில் களவாடப்பட்ட பொருள் வெளியே வருகிறது.
 • உங்கள் உணவை அடுத்தவர் மேசை மீது வைத்து உண்ணாதீர்கள்.
 • உன் காதலுக்கு ஒரு மணி நேரம், உன் இறைவனுக்கு ஒரு மணி நேரம் செலவிடு.
 • ஒரு கொசுவால் சிங்கத்தின் கண்களைக் கூட பழுதாக்க முடியும்
 • ஒவ்வொரு சொத்திற்குப் பின்னும் ஒரு குற்றம் ஒளிந்திருக்கிறது.
 • கழுகு தீமையுடையதாய் இருந்தால், அதன் இறக்கைகளை வெட்டியெறி.
 • காதலையும் கர்ப்பத்தையும் மறைத்து - வைக்க முடியாது.
 • காதல் ஏழு விநாடி, துக்கம் வாழ்க்கை முழுதும்.
 • குரைக்காத நாயும், கனைக்காத குதிரையும்,கருத்தைச் சொல்லாத மனிதனும் உள்ள நாட்டில் வாழாதே.
 • கூழாங்கற்கள் மலையிருந்தே உருவாகின்றன.
 • சிங்கத்தின் கோரைப் பற்களைக் காண நேர்ந்தால், அது சிரிப்பதாக நினைக்க வேண்டும்.
 • தன் மனைவியை மதிக்காதவன் தன்னையே அவமதித்துக் கொள்கிறான்
 • தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது.
 • தீமையை விட்டு விலகுங்கள். தீமை உங்களை விட்டு விலகிவிடும்.
 • பெண்பிள்ளை பயணம் போகிறாள் என்றால், ஓர் ஆண்பிள்ளை அவளுக்குக் கதவைத் திறப்பது தான் காரணம்.
 • பேச்சு வெள்ளியென்றால், அமைதி தங்கமாகும்.
 • பொய்யனை விட்டு விலகியிருங்கள்.அப்படி விலகியிருக்க முடியாவிட்டால் அவனை நம்ப வேண்டாம்.
 • பொய்யுரைப்பது நோய், உண்மையைப் பேசுவது அதற்கான சிகிச்சை.
 • பொறாமைக்காரனின் பார்வையை விட சிங்கத்தினால் உண்டான காயம் மேலானது.
 • மனிதரைத் தவிர, மற்ற விலங்குகள் அனைத்திலும் பெண் இனமே மேலானது.
 • முட்டாள் நண்பனை விட எதிரியே தேவலம்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அரேபிய_பழமொழிகள்&oldid=36786" இருந்து மீள்விக்கப்பட்டது