அயர்லந்து பழமொழிகள்
இப்பக்கத்தில் அயர்லந்து பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.
- ஆகக்கூடிய வயதுடையவனும் இறந்துதான் போனான்.
- 'ஆஸ்துமா' வந்தவர் நெடுநாள் வாழ்வர்.
- உயிருள்ளவரை பெண்களுக்கு வர்ணங்களில் ஆசையிருக்கும்.
- ஒவ்வொரு பிணியும் ஒரு வைத்தியன்.
- கம்பளியை இரட்டையாக மடித்துப் போர்த்துக்கொண்டால், மேலும் குளிருக்கு அடக்கம்தான்.
[உறவினருக்குள் விவாகம் செய்து கொள்ளல் மிகவும் நல்லது] - காதலுக்கு மருந்தில்லை, மருத்துவனுமில்லை.
- குழந்தையில்லாதவன் சும்மா குந்தியிருப்பது வீண்.
- நீ உன் மனைவியை மணந்து கொள்ளும் போதே உன் குழந்தைகளையும் மணந்து கொண்டு விட்டாய்.
(விவாகமானால், குழந்தைகளின் பாரத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.)
- நீடித்த நோய்களுக்குப் பொறுமைதான் மருந்து.
- பெண்பிள்ளை சயித்தானை வென்று விடுவாள்.
- மரணமே உலகின் யசமானன்.
- முகத்தில் ஒரு பரு வந்து விட்டால் உடலுக்குள் சயித்தான் புகுந்த மாதிரி.
- முதல் ஆண்டு முத்தமிடும் ஆண்டு, இரண்டாம் ஆண்டு முட்டிப் பாயும் ஆண்டு.
- வரட்சியான இருமல் வந்து விட்டால், எல்லா நோய்களும் தீர்ந்து விடும்.
[மரணம்] - வளர்ப்பதற்குச் சொந்தக் குழந்தை யில்லாதவன் அதிருஷ்டமில்லாதவன்.
- வாலிபத்திற்கு அடிக்கடி தோல் உரிந்து, புதுத் தோல் உண்டாகும்.
- வாலிபத்தைப் பாராட்டிப் பேசினால், அது மேன்மையடையும்.