அகிலன்

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்

அகிலன் (Akilan) என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் என்பவர் 1922 ஆம் ஆண்டு சூன் 27 முதல் 1988 ஆம் ஆண்டு சனவரி 31 வரையிலான காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். எதார்த்தம் மற்றும் ஆக்கப்பூர்வமான எழுத்து நடைக்கு பெயர் பெற்றவராக அகிலன் அறியப்படுகிறார். சிறப்புப் பெற்ற புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக இவருக்கு பல முகங்கள் உண்டு.

இவரது கருத்துகள்

தொகு
  • முன்பெல்லாம் யோசனை சொல்வதற்காகச் சிலரும், அதைக் கேட்பதற்காகப் பலரும் இருந்தார்கள். அதனால் யோசனை சொல்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தன. ஆனால், இப்போதைய நிலைமை அப்படியில்லை. நேர்மாறாகப் போய்விட்டது. யோசனைகளைத் தேடி, நாம் எங்கும் போக வேண்டியதில்லை. நம் இருப்பிடம் தேடித் தாமாக யோசனைகள் அடுக்கடுக்காய் வந்து குவியும் நாள் இது.[1]

குறிப்புகள்

தொகு
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அகிலன்&oldid=17883" இலிருந்து மீள்விக்கப்பட்டது