மேட்ரிக்ஸ் (திரைப்படம்)

ஒரு கணினி மேதை தன் வாழ்வின் நிஜ அர்த்தத்தை சில புதிர் புரட்சியாளர்கள் மூலம் கற்று கொண்டு,தன்னை அடக்கும் நபர்களிடம் போர் தொடுக்கிறான்.இது தான் 1999-ஆம் ஆண்டு வெளிவந்த , ஆன்டி வாச்சொவ்ச்கி மற்றும் லார்ரி வாச்சொவ்ச்கி எழுதி இயக்கிய "மேட்ரிக்ஸ்"-இன் மூலக்கதை.

அவர்களுக்கு ஒரு புத்துலகம் காண்பிக்க போகிறேன்...நீ அல்லாத உலகம். கட்டுப்பாடு மற்றும் விதிகள் அல்லாத, எல்லை மற்றும் வரம்பில்லாத , எதுவும் முடியும் என்ற உலகை. அங்கிருந்து நாம் எங்கு பயணிப்போம் என்பதை உன் விருப்பத்துக்கு விடுகிறேன்.

நியோ தொகு

  • நீ இருப்பது எனக்கு தெரியும் . என்னால் உன்னை உணர முடிகிறது . நீ அஞ்சுகிறாய் என்பது எனக்கு தெரியும் . எங்களை பார்த்தால் உனக்கு பயம் . மாற்றத்தை கண்டால் உனக்கு பயம் . எனக்கு எதிர்காலம் தெரியாது . இது எப்படி முடிய போகிறது என்று சொல்ல நான் இங்கு வரவில்லை . இது எப்படி தொடங்க போகிறது என்று நான் சொல்ல வந்துள்ளேன் . இந்த தொலைபேசியை நான் கீழே வைத்தபின் , நான் இவர்களுக்கு நீ காண்பிக்க விரும்பாததை காண்பிக்க போகிறேன். அவர்களுக்கு ஒரு புத்துலகம் காண்பிக்க போகிறேன்...நீ அல்லாத உலகம். கட்டுப்பாடு மற்றும் விதிகள் அல்லாத, எல்லை மற்றும் வரம்பில்லாத , எதுவும் முடியும் என்ற உலகை. அங்கிருந்து நாம் எங்கு பயணிப்போம் என்பதை உன் விருப்பத்துக்கு விடுகிறேன்.
 
துரதிரிஷ்டவசமாக, மேட்ரிக்ஸ் என்ன என்பதை யாருக்கும் கூற முடியாது. நீயே அதை பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும்.
 
அக்கரண்டியை வளைக்க முயலாதே - அது முடியாது. மாற்றாக, உண்மையை மற்றுமே உணர்ந்துகொள்: கரண்டி என்பதே இல்லை என்று .

மொர்பியஸ் தொகு

  • எது நிஜம்? நிஜம் என்பதை எப்படி வரையறுக்கிறாய்?? நீ எதை கேட்கிறாய்,எதை நுகர்கிறாய் ,சுவைக்கிறாய் மற்றும் உணர்கிறாய் என்பதை பற்றி பேசுகிறாய் எனில் , நிஜம் என்பது உன் மூளை பெயர்க்கும் மின்சமிக்கைகளே.
  • மேட்ரிக்ஸ் என்பது ஒரு அமைப்பு , நியோ. அவ்வமைப்பே நமது எதிரி. ஆனால் நீ அதன் உள்ளிருக்கும் பொழுது , சுற்றும் பார், நீ எதை பார்கிறாய்? தொழிலதிபர்கள் , ஆசிரியர்கள் , சட்ட வல்லுனர்கள், தச்சர்கள். நாம் காப்பாற்ற நினைக்கும் மக்கள். ஆனால், நாம் அதை செய்யும் வரை,இவர்களும் அவ்வமைப்பின் அங்கமாகவே விளங்குகிறார்கள் , அதுவே இவர்களை நம் எதிரிகளாக மாற்றுகிறது. இவர்களில் பலர் இவ்வமைப்பிலிரிந்து வெளிவர தயாராக இல்லை என்பதை நீ புரிந்துகொள்ளவேண்டும் . மற்றும் பலர் இவ்வமைப்பின் மீது மிகவும் சார்ந்து உள்ளதால், இவர்கள் இதை காப்பாற்றச் சண்டையிடுவார்கள்.
  • நியோ, ஒரு பாதை பற்றி அறிவதற்கும் மற்றும் அதில் பயணிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்பதை , நான் உணர்ந்தது போலவே நீயும் சீக்கிரம் உணர்வாய்
  • நான் உனது மனதை தெளிவு படுத்துகிறேன், நியோ. ஆனால், என்னால் கதவை மட்டுமே காண்பிக்க முடியும். நீதான் அதன் வழியே பயணிக்க வேண்டும்.

முகவர் ஸ்மித் தொகு

  • சிலநாட்களாக நாங்கள் தங்களை கண்காணிக்கிறோம் என்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள் , அன்டேர்சன் அவர்களே. நீங்கள் இருவேறு வாழ்க்கை வாழ்வது போல் தெரிகிறது. ஒன்றில், நீங்கள் ஒரு மரியாதைக்குரிய மென்பொருள் நிறுவனத்தில் கணிப்பொறிக்கு கட்டளைகள் எழுதும் தாமஸ்.எ.அன்டேர்சன். உங்களுக்கு சமூக பாதுகாப்பு எண் உள்ளது, வரிகளை செலுத்துகிறீர்கள் மற்றும் உங்கள் வீட்டு உரிமையாளரம்மாவுக்கு உதவுகிறீர்கள். இன்னொன்றில், நம் சட்டங்கள் அனைத்திலும் தண்டிக்கப்படகூடிய அத்துணை கணிப்பொறி குற்றங்களை செய்யும் "நியோ" எனும் புனைப்பெயர் கொண்ட குற்றவாளியாக வாழ்கிறீர்கள். இதில் ஒரு வாழ்க்கைக்கு எதிர்காலம் உண்டு, அது மற்றொன்றுக்கு இல்லை.
  • நான் இங்கு இருந்த சமயத்தில் உணர்ந்ததை பகிர விரும்புகிறேன். உங்கள் இனத்தை வகைபடுத்தும்போழுது அது எனக்கு புலப்பட்டது. நீங்கள் உண்மையில் பாலூட்டிகள் இல்லை என்பதை நான் உணர்ந்தேன் . இக்கிரகத்தின் ஒவ்வொரு பாலூட்டியும் தன் சுற்றுசூழ்ளுடன் ஓர் இயல்பான் சமநிலையை வளர்த்து கொள்கிறது, ஆனால் மனிதர்களான நீங்கள் அதை செய்வதில்லை. நீங்கள் வேறிடத்துக்கு பெயர்கிறீர்கள், அங்குள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் அழியும் வரை உங்கள் இனத்தை பெருக்கி கொண்டிருகிறீர்கள். இன்னொரு இடத்துக்கு பரவினால் மட்டுமே உங்களால் பிழைக்க முடியும். இதே அமைப்பு கொண்ட வேறொரு உயிரினம் இக்கிரகத்தில் உண்டு. அது என்னவென்று தெரியுமா? அது தீநுண்மம் . மனிதர்கள் ஒரு நோய், இக்கிரகத்தின் புற்றுநோய். நீங்கள் தொற்றுநோய், மற்றும் நாங்கள்.. அதை அழிக்கும் மருந்து.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மேட்ரிக்ஸ்_(திரைப்படம்)&oldid=11496" இலிருந்து மீள்விக்கப்பட்டது